உலகம் முழுவதும் வைரலாகி வரும் செம க்யூட்டான பேபி ஹிப்போ!

Cute baby hippo
Do you know why the cute baby hippo is going viral all over the world?Image credits: Times of India
Published on

தாய்லாந்தில் உள்ள Khao kheow என்னும் உயிரியல் பூங்காவில் இருக்கும் பேபி Pygmy ஹிப்போதான் தற்போது உலகம் முழுவதும் மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களே ஆன இந்த பெண் ஹிப்போவின் பெயர் Moo deng ஆகும். இந்த உயிரியல் பூங்காவில் இருப்பவர்கள் இந்த குட்டி ஹிப்போவின் செய்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டதில் இருந்து மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குட்டி ஹிப்போவின் சாம்பல் நிற சருமமும், பிங்க் நிற கன்னமும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இது கோபப்பட்டால் மேலும் அழகாக இருக்கிறது. உயிரியல் பூங்காவின் தனது கீப்பரின் காலை கடிக்க முயற்சிப்பது, ஏற முயற்சித்து வழுக்கி விழுவது என்று இந்த குட்டி ஹிப்போவின் செய்கைகள் அனைத்தும் செம க்யூட்டாக இருப்பதால், இதற்கு மில்லியன் கணக்கில் விசிறிகள் வந்துவிட்டார்கள்.

இந்தக் குட்டி ஹிப்போ பிறந்ததிலிருந்து இந்த உயிரியல் பூங்காவிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு கூடிவிட்டது. இந்த ஹிப்போவை 24/7 லைவ் ஸ்ட்ரீம் செய்து கண்காணிக்கிறார்கள். பூங்காவிற்கு வரும் சில பார்வையாளர்கள் இந்தக் குட்டி ஹிப்போவின் மீது தண்ணீரை ஊற்றி இதற்கு தொந்தரவு கொடுக்கின்றனர். அதனால், பூங்காவில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கிறார்கள். குட்டி ஹிப்போவை தொந்தரவு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்த Moo deng குட்டி ஹிப்போவை பார்த்து மக்கள் கேக், Latte coffee ஆர்ட், டிரெஸ்ஸில் டிசைன்கள் செய்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று சமூக வலைத்தத்தில் Moo deng மேக்கப் டுட்டோரியல் கூட செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
கருப்பு திராட்சை Vs பச்சை திராட்சை: எது சிறந்தது தெரியுமா?
Cute baby hippo

தாய்லாந்தில் உள்ள Sephora என்ற மேக்கப் கம்பெனி மேக்கப்களை விளம்பரம் செய்ய Moo deng ஹிப்போவை பயன்படுத்தியுள்ளனர். இந்த குட்டி Moo deng ஹிப்போ இவ்வளவு பிரபலமானதால், பூங்கா அதிகாரிகள் 'Moo deng the hippo' என்று காப்பி ரைட் வாங்க முயற்சித்து வருகிறார்கள். இந்தக் குட்டி ஹிப்போவின் செய்கை உங்கள் மனதையும் கவர்ந்ததா? என்று சொல்லுங்க பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com