
மனிதர்களால் அழிக்கப்பட்ட பறவை இனம் தான் டோடோ பறவை. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு கண்டங்கள் தனி தனியாக பிரியும் போது இந்திய பெருங்கடலுக்கு நடுவில் இருந்து ஒரு தீவு முளைக்கிறது அது தான் மொரிஸியஸ் தீவு. அது கடலுக்கு நடுவேயிருந்ததால், எந்த விலங்காலும் அங்கு போக முடியவில்லை. ஆனால், பறவைகளால் அங்கே செல்ல முடிந்தது.
இந்த டோடோ பறவை ஒரு புறா வகையை சார்ந்ததாகும். கிட்டத்தட்ட எட்டு மில்லியன் வருடத்திற்கு முன் புறாக்கள் இந்திய பெருங்கடல் மீது பறந்து சென்று கொண்டிருந்தன. அப்போது கீழே பார்த்தால் அழகான தீவு ஒன்று இருந்திருக்கிறது. எந்த விலங்கும் இல்லை, எந்த பிரச்னையும் இல்லை. உண்ண ஏராளமான உணவுகள் இருந்தன. இதனால் அங்கே சென்ற இந்த புறாக்கள் நாளடைவில் அங்கேயே தங்கிவிட்டன. காலம் போக போக இந்த புறாக்கள் எடைப்போட்டு 3 அடி உயரமும் 15 கிலோ எடையும் கொண்டதாக மாறுகின்றன.
இதனால் அதனுடைய பறக்கும் திறன் போய் விடுகிறது. இருப்பினும் இந்த டோடோ பறவைகள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்துக் கொண்டிருந்தன.1598 ஐரோப்பியர்கள் இந்த தீவிற்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள். அங்கிருந்த டோடோ பறவைகளை கொன்று சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். அது நல்ல சுவையாக இருந்திருக்கிறது. அந்த தீவில் இருந்த மரத்தை அழிப்பது, டோடோ பறவைகளின் வீட்டை அழிப்பது என்று செய்ததால் பாதி டோடோ பறவைகள் அழிந்துவிடுகின்றன.
இந்த டோடோ பறவைகள் இத்தனை வருடங்களாக எந்த எதிரியையும் பார்க்காமல் வாழ்ந்துவிட்டு திடீரென்று ஆபத்தை பார்க்கும் போது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. இதனால் அந்த டோடோ பறவைகள் 100 வருடத்திலேயே அழிந்து போகின்றன. 1681 ல் கடைசி டோடோ பறவை கொல்லப்படுகிறது.
8 மில்லியன் வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த பறவைகளை 100 வருடத்தில் மனிதர்கள் கொன்று முடிக்கிறார்கள்.
தற்போது 150 மில்லியன் டாலர்கள் செலவு செய்து இந்த டோடோ பறவைகளை திரும்ப கிளோன் செய்து கொண்டு வருவதற்கான வேலைகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்!அறிவியல் ஆராய்ச்சிகள் ஆச்சரியம் அளிகின்றன அல்லவா?
அன்று அழித்ததும் அவனே; இன்று மீண்டும் படைப்பதும் அவனே!