Dragon’s Blood Tree: இயற்கையின் அதிசயம்! 

Dragon’s Blood Tree
Dragon’s Blood Tree
Published on

உலகில் பல அதிசயங்கள் உள்ளன. அதுவும் இயற்கை சார்ந்த அதிசயங்கள் என பலவற்றை சொல்லலாம். அவற்றில் ஒன்றுதான் டிராகனின் இரத்த மரம் (Dragon’s Blood Tree). இம்மரம் தனது தனித்துவமான தோற்றம், மருத்துவ குணங்கள் கொண்ட சாறு ஆகியவற்றால் இயற்கை ஆர்வலர்களைக் கவர்ந்துள்ளது. 

Dracaena Cinnabari என்றும் அழைக்கப்படும் இந்த மரம் சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள சோகோத்ரா தீவில் அதிகம் காணப்படுகிறது. இம்மரத்தின் தோற்றம் மிகவும் வித்தியாசமானது. அதன் கிளைகள் ஒரு புள்ளியில் இருந்து வெளிவந்து ரத்த நாளங்கள் போல விரிந்து இருக்கும். இதனால், இம்மரம் பார்ப்பதற்கு குடை போன்ற அமைப்பைப் பெறுகிறது. இந்த மரத்தின் இலைகள் நீளமாகவும், கூர்மையாகவும், பச்சை நிறத்திலும் இருக்கும். 

டிராகன்ஸ் பிளட் மரத்தின் மிகவும் பிரபலமான அம்சம் அதன் சாறுதான். இந்த சாறு மரத்தின் பட்டை அல்லது கிளைகளை வெட்டும்போது வெளிப்படும். இச்சாறு காற்றுடன் வினைபுரிந்து சிவப்பு நிறமாக மாறி ரத்தத்தைப்போல காட்சியளிக்கும். இதனால்தான் இம்மரம் டிராகனின் ரத்த மரம் என்று அழைக்கப்படுகிறது. 

இந்த மரத்தின் சாறு பண்டைய காலங்களில் இருந்தே பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பாக்டீரியா, வீக்கம், புண்கள், வயிற்றுப்போக்கு, வயிற்று புண்கள் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் தன்மை கொண்டது. இதுதவிர வண்ணப் பொருள்கள், மரப்பால், மத சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருளாகவும் இது உள்ளது. 

தற்போது டிராகன்ஸ் பிளட் மரத்தின் சாற்றில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சிகள் புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இம்மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதால் அழிவின் விளிம்பில் உள்ளது. இதனால், இவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இதையும் படியுங்கள்:
பேய், பிசாசு, காத்து கருப்பை அண்ட விடாத மரங்கள் எவை தெரியுமா?
Dragon’s Blood Tree

இந்த மரங்கள் சோகோத்ரா தீவின் சூழலியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை அந்தத் தீவின் தனித்துவமான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் வாழ்விடத்தை வழங்குகின்றன. மேலும், அவை மண்ணரிப்பை தடுக்கவும், மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகின்றன. இருப்பினும் காலநிலை மாற்றம், மனித நடவடிக்கைகள், வாழ்விட இழப்பு ஆகியவை இந்த மரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. 

இதன் காரணமாகவே, சோகோத்ரா தீவு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களமாக அறிவிக்கப்பட்டு, இம்மரம் மற்றும் அதன் வாழ்விடம் பாதுகாக்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com