மினரல் வாட்டராக மாறும் நிலத்தடி நீரின் பின்னணி! –தெரிஞ்சுக்கலாமா?

mineral water
mineral water products
Published on

யிரினங்கள் உயிர் வாழ நீர் இன்றியமையாதது. அதிலும் மனிதனுக்கு நல்ல குடிதண்ணீரே ஆரோக்கியத்தின் வெளிப்பாடாக உள்ளது. அந்த வகையில் பாட்டில்களில் அடைக்கப்படும் மினரல் வாட்டர் தயாரிக்கும் முறை குறித்தும், அந்த பாட்டில்களை பயன்படுத்திய பின்பு என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் இப்பதிவில் காண்போம்.

மினரல் வாட்டர் தயாரிக்கும் முறை

போர்வெல்லில் இருந்து Tankல் சேமிக்கப்படும் நீர் முதலில் Sand Filterயை சென்றடைகிறது. இது நிலத்தடி நீரிலிருந்து வரும் கல், மண் மற்றும் தூசு ஆகியவற்றை நீக்குகிறது. அடுத்து Activated Carbon Filterக்கு செல்லும் நீரில் உள்ள துர்நாற்றம், கசப்புத் தன்மை மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்களை இந்த ஃபில்டர் நீக்குகிறது.

இவ்வாறு பில்டர் செய்யப்பட்ட நீரில் மெக்னீசியம் சல்பேட், பொட்டாசியம் பை கார்பனேட் போன்ற மினரல்கள் சேர்க்கப்படுகின்றன. அதன் பிறகு Reverse Osmosis System என்ற செயல்முறைக்கு நீர் செல்கிறது. இந்த முறையில் நீரில் உள்ள உப்பு தன்மை முழுவதுமாக நீக்கப்பட்டு நல்ல தண்ணீராக மாற்றப்படுகிறது.

இந்த நீர் Product Water Storage Tankல் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்பட்ட நீர் 1Micron Filter, 0.5Micron Filter, Ultra Violet Radiation என்ற நிலைகளுக்கு அனுப்பப்பட்டு நீரில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் கொல்லப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு Final Product Water Storage Tankற்கு சென்று சேமிக்கப்படுகிறது.

பாட்டில் தயாரிக்கும் முறை

300 ml Free form யை மெஷினில் உள்ள லோடரில் அனுப்பினால், ஸ்லைடு வழியாகச் சென்று, வெப்பமாகி மோல்ட் வழியாகச் சென்று வாட்டர் பாட்டிலாக மாறி வெளிவருகிறது. பாட்டில் அளவுகளுக்கு ஏற்றவாறு free form தேர்வு செய்கிறார்கள்.

பாட்டிலில் தண்ணீர் அடைக்கும் முறை

தயாரிக்கப்பட்ட பாட்டில் air flow வழியாக அனுப்பப்பட்டு, சுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட பாட்டிலில் Final Product Water Storage Tankல் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிரப்பப்படுகிறது. பின்னர் மூடி போட்டு கன்வேயர் வழியாக பாட்டில் வெளிவருகிறது. வெளிவரும் பாட்டிலில் தூசி இருந்தால் அங்கிருக்கும் UV லைட் வழியாக சரிபார்க்கப்பட்டு பின்பு தயாரிப்பு தேதி காலாவதி தேதி பிரிண்ட் செய்யப்பட்டு லேபிள் ஒட்டப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்:
கொசுக்களையும், டெங்குவையும் ஒழிக்கும் 'சூப்பர் ஹீரோ' தட்டான்பூச்சிகள்!
mineral water

பயன்படுத்திய பாட்டிலை என்ன செய்யவேண்டும்

குடிக்க தண்ணீர் வாங்கும் போது பாட்டிலில் ISI முத்திரை,FSSI நம்பர், தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதி தெளிவாக இருக்கிறதா என்பதனை பார்த்து வாங்கவேண்டும். பின்னர் பயன்படுத்திய பாட்டிலை மறுபடியும் யாரும் உபயோகிக்காத வகையில் மூடியை பாட்டிலினுள் போட்டு கிரஷ் செய்து குப்பைத் தொட்டியில் போடவேண்டும்.

'குடிநீரை வீணாக்காதே' என்ற வாசகத்தை நாம் அடிக்கடி படித்திருப்போம். மனிதனுக்கு இன்றியமையாத தேவையான குடிநீரை ஒரு துளி கூட வீணாக்காமல் இருப்பதை ஒவ்வொருவரும் தங்களது கடமையாகக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com