சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இயற்கை, மறுசுழற்சி வீடுகள்!

Eco-Friendly Recycled Homes!
Eco-Friendly Recycled Homes!
Published on

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையோடு ஒன்றிணைந்த மறுசுழற்சி வீடுகள். புதுச்சேரியில் பின்பற்றப்படும் சிறப்பு திட்டம்.

உலகம் முழுவதும் தீவிர வளர்ச்சிகளை சந்திக்கும் துறைகளில் ஒன்றாக கட்டிடத்துறை உள்ளது. அதிகரித்து வரும் உலக மக்கள் தொகைக்கு ஈடாக குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், விற்பனை நிலையங்கள் இன்று பல்வேறு வகையான கட்டிடங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. இதனால் உலகம் முழுவதுமே கட்டுமானத்துறை வளர்ச்சி சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் கட்டப்படும் புதிய கட்டுமானங்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து, இயற்கை சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் ஏற்றார் போல் இருக்கிறதா என்பதில் பெரும்பான்மையான கட்டிட நிறுவனங்கள் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் புதுச்சேரியில் ஹ்யூமன்ஸ்கேப்ஸ் என்ற திட்டத்தின் அடிப்படையில் இயற்கைக்கு ஏற்ற, இயற்கையோடு ஒன்றிணைந்த மற்றும் நீண்ட நிலைத்தன்மை கொண்ட கட்டுமானங்கள் கட்டும் முயற்சி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் கட்டமான பணி தொடங்கும் முன்பே நிலத்தினுடைய தன்மை ஆராயப்பட்டு, நீர் மேலாண்மை குறித்த முதல் கட்டத் திட்டம் வகுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கட்டுமானம் எவ்வாறு அமைய வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. மேலும் கட்டுமானத்தில் சூரிய ஒளி எவ்வாறு படும் என்று முன்கூட்டியே ஆராயப்படுகிறது. இதன் மூலம் கட்டுமானத்தில் தடிமன் அதிகப்படுத்துவது, செம்மண் பயன்படுத்துவது, கூலிங் சீட் பயன்படுத்துவது போன்றவை திட்டமிடப்படுகிறது. இதனால் வீட்டினுடைய மின்சாரத்தை குறைக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. வீட்டிற்குள் காற்றோட்டம் செல்லும் வகையில் கட்டுமான அமைக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மழை நீரை சேமிக்கும் வகையில் தனித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு நிலத்துக்கு அடியில் நீர் எளிதாக செல்லும் வழி ஏற்படுத்தப்படுகிறது. இது கட்டுமானத்திற்கு பாதிப்பு இல்லாமல் நிலத்தடி நீரை சேமிக்கும் திட்டம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
கழிவு நீரை குடிநீராக்கும் நானோ டெக்னாலஜி!
Eco-Friendly Recycled Homes!

இது மட்டுமல்லாமல் கட்டுமான கழிவுகளை துகள்களாக மாற்றி அவை மணலாக பயன்படுத்தப்படுகிறது. மூன்றாம் தர செராமிக்ஸ் டைல்ஸ்கள் மேல் புறத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. சுண்ணாம்பு கழிவுகள் கட்டுமானத்தின் மேல் புற பூச்சிகளாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் கட்டிடங்கள் நீடித்த நிலைத்தன்மை கொண்டிருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் மற்றும் இயற்கை என்று ஒருங்கிணைந்த பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com