பேர கேட்டாலே சும்மா அதிருதுல.. தொட்டாலே இறப்பு நிச்சயம்.. அச்சுறுத்தும் பஃபர் மீன் பற்றி தெரியுமா?

பஃபர் மீன்
பஃபர் மீன்

பார்த்தாலே பயத்தை உண்டாக்கும் மீன் தான் பஃபர் மீன். வெப்ப மண்டல பகுதிகளில் மட்டும் அதிகம் காணப்படும் இந்த வகை மீன் அதிக விஷத்தன்மை கொண்ட மீனாக கருதப்படுகிறது. அசைவ பிரியர்களுக்கு கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் பேவரைட்டாக தான் இருக்கும். ஆனால் இந்த வகை மீனால் தொட்டால் இறப்பு நிச்சயம்.

ஆங்கிலத்தில் பஃபர் மீன் என சொல்லப்படும் இந்த மீனிற்கு தமிழில் கோளமீன் என பெயருண்டு. இலங்கை மக்கள் இதை பேத்தையன் என்கிறனர். பொதுவாக மீன்கள் என்றாலே செதில்கள், முட்கள் என்று தான் இருக்கும். எளிதில் மீனை கையாளமுடியும். ஆனால் இந்த வகை மீன்களை பிடிப்பதே சிரமமானதுதான்.

இம்மீனுக்கு செதில் கிடையாது. ஆனால் உடல் முழுவதும் சிறிதும் பெரிதுமாக முற்கள் காணப்படும். ஜப்பான் கடல் பகுதியில் கோள மீன்கள் பரவலாக காணப்படுகின்றன. உலகத்தில் அதிக விஷம் எளிதில் பரவக்கூடியது என்றால் சயனைட் தான். இந்த வகை மீன் சயனைவிட 1200 மடங்கு விஷத்தன்மை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இந்த வகை மீனை பார்த்தாலே அலறுவார்கள்.

ஆனால் இதை சமைப்பதற்கு ஏற்ற

இந்த மீனின் உடலில் இருக்கும் முற்களில் தான் விஷம் இருக்கும். அது மனிதனை தாக்கினால், 24 மணிநேரத்துக்குள் மரணம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதனை சமையல் வல்லுநர்கள் முற்களை எல்லாம் நீக்கிவிட்டு விஷத்தையும் போக்கிவிட்டு பக்குவமாக சமைப்பார்கள். ஆனால் பொதுமக்கள் முற்களை நீக்கி விஷத்தை நீக்கிவிட்டோம் என்று சமைத்து சாப்பிட்டு மரணம் ஏற்பட்டதும் உண்டு. சமீபத்தில் பிரேசிலில் கூட இளைஞர் ஒருவர் பஃபர் மீனை சமைத்து சாப்பிட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நஞ்சு மிகுந்த முட்களையெல்லாம் நீக்கிவிட்டு, இந்த மீனை ஜப்பானியர்கள் மட்டுமே அதிகம் சமைத்து சாப்பிடுகின்றனர். கோள மீன் கொண்டு செய்யப்படும் ‘புகு சூப்’ ஜப்பானில் மிகவும் பிரபலம். ஜப்பானில் இந்த மீனை பக்குவத்துடன் வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சிப் பெற்று உரிமம் பெறும் சமையலருக்கு மட்டுமே கோள மீன்களை சமைக்க அரசு அனுமதி வழங்குகிறது. இப்படிப்பட்ட மீனை வீட்டில் எடுத்து சென்று சமைத்து சாப்பிடும் அனைவரும் இறப்பு உறுதியானது. ஒரு மீனின் உடம்பில் இவ்வளவு விஷம் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்கிறது.

பார்ப்பதற்கே பெரிதாக இருக்கும் திமிங்கலம், சுறா மீனிடம் இருந்து கூட தப்பித்து விடலாம் கூட பஃபர் மீனிடம் இருந்து தப்பமுடியாது என சொல்லப்படுகிறது. இந்த மீனின் நாக்கு அல்லது உதட்டை தொட்டாலே இறப்பு நிச்சயம் எனவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com