வரும் காலங்களிலும் சென்னை புயலால் பாதிப்படையும். அதிர்ச்சி ரிப்போர்ட்!

Cyclone In Chennai.
Cyclone In Chennai.
Published on

வரும் காலங்களில் சென்னை புயல் பாதிப்புகளை அடிக்கடி சந்திக்கும் என்று சர்வதேச வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் ஏற்படுத்திய தாக்கமே இன்று வரை அழியாத தழும்பாக இருந்து வரும் நிலையில், தற்போது மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையின் அளவு விட கூடுதலாக இருக்கிறது. ஆனாலும் முன்பை காட்டிலும் இழப்பு சற்று குறைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில பகுதிகள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான மக்களுக்கு இன்னும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படவில்லை. இப்படி மழை வெள்ளநீர் வடியாத பகுதி மக்களின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையையும் முடக்கி இருக்கிறது.

இந்த நிலையில் சர்வதேச வானிலை ஆராய்ச்சி நிறுவனம், சென்னை இதுபோன்ற வெள்ள பாதிப்புகளை இனி அடிக்கடி சந்திக்க நேரிடும் என்று கூறி இருக்கிறது. காலம் தவறிய மழையால் சென்னை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவை!
Cyclone In Chennai.

அடுத்த ஐந்தாண்டுகளில் சென்னையின் 29 சதவீத பரப்புகள் மழை வெள்ளத்தால் பாதிப்படையும். 25 ஆண்டுகளில் 46 சதவீத பரப்பளவு மழை வெள்ளத்தால் பாதிப்பு செய்திக்கும். அடுத்த 50 ஆண்டுகளில் 100% அளவிற்கு புயல் பாதிப்பு இருக்கும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு சந்திப்பார்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சந்திக்க உலக நாடுகள் அனைத்தும் சரியான திட்டமிடலை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com