தங்கத்தை அப்படியே உரிஞ்சி குடிக்கும் விசித்திரமான காளான்... ஆஸ்திரேலியாவில் சிக்கிய மாபெரும் அதிசயம்!

gold-eating-fungus
gold-eating-fungus
Published on

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள தங்கச் சுரங்கப் பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு வியக்கத்தக்க விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது மண்ணுக்குள் இருக்கும் தங்கத்தை தன்னுள் ஈர்த்துக்கொண்டு வளரும் ஒரு அபூர்வமான பூஞ்சை அங்கு வாழ்ந்து வருகிறது. இதை ஏதோ கட்டுக்கதை என நீங்கள் நினைக்க வேண்டாம். இது நூறு சதவீதம் உறுதியான உண்மையாகும். 

பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த நுண்ணுயிரியின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த அறிவியல் உலகத்தையும் தற்போது திகைக்க வைத்துள்ளது. இந்த விசித்திரமான காளானைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இப்போது பார்ப்போம்.

தங்கத்தை உறிஞ்சும் காளான்!

அறிவியல் ரீதியாக ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம் (Fusarium Oxysporum) என்று அழைக்கப்படும் இந்த நுண்ணுயிரி செய்யும் வேலை பிரம்மாண்டமானது. பூமியின் ஆழத்தில் உள்ள கனிமங்களோடு இது ஒரு அசாதாரண வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் கடினமான தங்கத்தை அப்படியே திரவமாக மாற்றி அதனைத் தனது நரம்புகள் வழியாக உறிஞ்சுகிறது. 

அதன் பிறகு அந்த தங்கம் அதன் உடலிலேயே சிறு சிறு படிகங்களாக ஒட்டிக்கொள்கிறது. இதை அதிநவீன நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்தால் அந்தப் பூஞ்சையின் கிளைகளில் தங்கக் கட்டிகள் அழகாகப் படர்ந்திருப்பது போலத் தோற்றமளிக்கும்.

தங்கம் கொடுக்கும் எக்ஸ்ட்ரா எனர்ஜி!

இந்த தங்கம் வெறும் அழகுக்காக மட்டும் அதன் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. சாதாரண பூஞ்சைகளைக் காட்டிலும் தங்கத்தை ஈர்க்கும் இந்த குறிப்பிட்ட வகைக் காளான்கள் வேகமாகவும் அளவில் சற்றுப் பெரியதாகவும் வளர்கின்றன. ஆஸ்திரேலியாவின் கடுமையான தட்பவெப்ப நிலையிலும் இவை மற்ற நுண்ணுயிரிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரொம்பவே ஸ்ட்ராங்காக உயிர்வாழ்வதற்கு இந்த தங்கத் துகள்கள் ஒரு பெரிய எனர்ஜி டானிக் போலச் செயல்படுகின்றன.

விண்வெளி ஆராய்ச்சி!

இந்த பிரம்மாண்டமான கண்டுபிடிப்பு வெறும் பூமிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறது. நிலவு அல்லது செவ்வாய் கிரகத்தில் உள்ள கனிமங்களை வெட்டி எடுக்கப் பெரிய பெரிய கனரக இயந்திரங்களை ராக்கெட்டில் சுமந்து செல்வது பல கோடி ரூபாய் செலவாகும் ஒரு காரியமாகும்.

இதையும் படியுங்கள்:
காரமான பச்சை மிளகாய்க்கு பதிலாக உணவுக்கு சுவை கூட்டும் மிளகாய் வகைகள்!
gold-eating-fungus

அதற்குப் பதிலாக இதுபோன்ற நுண்ணுயிரிகளை விண்வெளிக்குக் கொண்டு சென்றால் அங்குள்ள மண்ணில் மறைந்திருக்கும் தங்கத்தையும் பிற உலோகங்களையும் ஈஸியாக பிரித்தெடுக்க முடியும் என நாசா போன்ற பெரிய விண்வெளி மையங்கள் இப்போதே தீவிரமாகத் திட்டமிடத் தொடங்கிவிட்டன.

பூமியில் புதையல்!

விண்வெளிக்கு செல்வதற்கு முன்பாக நமது பூமியிலேயே இது மிகப்பெரிய லாபத்தைக் கொடுக்கப் போகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தரையின் மேற்பரப்பில் இந்தக் காளான்கள் அதிகமாக வளர்ந்திருந்தால் நிச்சயம் அதற்குப் கீழே பெரிய அளவில் தங்கப் புதையல் இருக்கிறது என்பதை நாம் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். 

இதற்காகப் பல லட்சம் ரூபாய் செலவு செய்து எந்திரங்களைக் கொண்டு பூமியை ஆழமாகத் தோண்டிப் பார்க்க வேண்டிய அவசியமே இனி இருக்காது. சுரங்கத் தொழிலில் கனிமங்களைத் தேடும் வேலையை இது சுலபமாக்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
ஒரு தண்ணீர்க் கதை
gold-eating-fungus

இயற்கையில் உள்ள ஒரு சின்னஞ்சிறு உயிர் தொழில்நுட்ப உலகிற்கு ஒரு மாபெரும் வழிகாட்டியாக மாறியுள்ளது. கண்களுக்குத் தெரியாத ஒரு பூஞ்சை பூமியில் தங்கத்தை தேடிக் கண்டுபிடிப்பது மட்டுமில்லாமல் நாளை செவ்வாய் கிரகத்திலும் தனது ராஜ்யத்தை அமைக்கப் போகிறது. இயற்கையோடு இணைந்து நாம் அறிவியலை முன்னெடுத்துச் சென்றால் இதுபோன்ற பல நம்ப முடியாத அற்புதங்களை மனித குலத்தால் நிச்சயம் நிகழ்த்திக் காட்ட முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com