

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14,000 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி நிலங்களில் எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை பயிரிடப்பட்டது. நடப்பாண்டில் போதிய மழை இல்லாமல் நிலக்கடலை செடிகள் வாடி மடிந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் மானாவாரி பயிர்களான நிலக்கடலை, சோளம், துவரை ஆகியவை பயிரிடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை அதிக அளவிலான லாபத்தை தந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பருவமழையை நம்பி 14,000 ஹெக்டர் பரப்பளவில் நிலக்கடலையை பயிரிட்டனர். ஆனால் நடப்பாண்டில் பருவமழை இல்லாமையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பருவ மழை பொய்திருப்பதாலும், அதிக அளவிலான வெயில் தாக்கத்தாலும் நிலக்கடலை செடிகள் காய்ந்து மடிந்து வருகின்றன. ஜூன் மாதத்தில் பயிரிடப்பட்டு ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் பூ பூத்து அறுவடைக்கு தயாராக வேண்டிய நிலக்கடலை, நடப்பாண்டு காய்ந்து வருவதால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்று விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏக்கருக்கு 15,000 செலவு செய்து 14,000 ஹெக்டேர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலக்கடலையை பயிரிட்டனர். ஆனால் பருவமழை நடப்பாண்டில் பருவமழை பொய்த்துப் போனது. இதனால் விளைச்சலை முழுமையாக தடைப்பட்டுள்ளது. விவசாயிகள் கடனாளியாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று நிலக்கடலையை பேரிட்டு விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் அரசு நிலக்கடலையை பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதிக அளவிலான வெயில் தாக்கத்தாலும் நிலக்கடலை செடிகள் காய்ந்து மடிந்து வருகின்றன. ஜூன் மாதத்தில் பயிரிடப்பட்டு ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் பூ பூத்து அறுவடைக்கு தயாராக வேண்டிய நிலக்கடலை, நடப்பாண்டு காய்ந்து வருவதால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்று விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏக்கருக்கு 15,000 செலவு செய்து 14,000 ஹெக்டேர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலக்கடலையை பயிரிட்டனர். ஆனால் பருவமழை நடப்பாண்டில் பருவமழை பொய்த்துப் போனது. இதனால் விளைச்சலை முழுமையாக தடைப்பட்டுள்ளது. விவசாயிகள் கடனாளியாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று நிலக்கடலையை பேரிட்டு விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் அரசு நிலக்கடலையை பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.