இந்தியாவின் டெக்னிக் பிளேட் நகர்வினால் இமயமலை கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது என சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த செயல்முறையால் திபெத் நாடு இரண்டாக பிரியக்கூடும் என புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
யுரேசியா மற்றும் இந்தியாவின் டெட்ரானிக் தகடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மலைத்தொடர்களின் கீழ் மோதுவதால் இமயமலை வளர்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக டெக்கானிக் தகடுகள் நகர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் போது, அதில் அடர்த்தியாக இருக்கும் தகடு கீழே சரியும். ஆனால் இந்த டெக்கானிக் தகடு நகர்வில் இரண்டும் ஒரே அடர்த்தியுடன் இருப்பதால் எந்த டெக்னிக் தகடு மேலே நிற்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இந்த கான்டினென்டல் தகடுகள், கடல் தகடுகளைப் போல அடர்த்தியாக இல்லாமல் மிதமான தடிமானத்தில் இருக்கும். இவை மோதல் ஏற்படும்போது எளிதாக நொறுங்கி பூமியின் மேண்டல் பகுதிக்குள் அடங்கிவிடும் என அர்த்தம். இந்த டெக்கானிக் தகடுகள் திபத்துக்கு கீழே சறுக்கிக் கொண்டு போகும்போது, இந்தியாவின் தகடு மேலடுக்கில் மூழ்கி இமயமலையை கொஞ்சம் உயர்த்தும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
திபத்துக்கு கீழே நிலநடுக்க அலைகளை ஆய்வு செய்யும் போது இந்த நிகழ்வு கண்டறியப்பட்டது. அதேபோல யுரேஷியா தட்டுக்கு அடியே சாயும் போது இந்தியாவின் தட்டு அதன் அடர்த்தியான பகுதியிலிருந்து தனியாக பிரியும் வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆய்வாளர்களின் கூற்றுப்படி கண்டங்களில் இத்தகைய நிகழ்வு நடக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இது குறித்த ஆராய்ச்சி அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்தில் முன் வைக்கப்பட்டது.
இதன் மூலமாக விஞ்ஞானிகள் இமயமலையின் உருவாக்கத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். மேலும் எதிர்காலத்தில் இப்பகுதியில் நிலநடுக்கம் சார்ந்த விஷயங்களை புரிந்து கொண்டு மக்களுக்கு உதவ முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.