ஓ! இதுதான் ஆடி மயக்குறதா? நடனமாடும் பறவையை பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?

Dancing bird of paradise
Dancing bird of paradise

உலகின் பல விசித்திர பறவைகளில் ஒன்றுதான் Bird of paradise. அதாவது இந்தப் பறவைகள் தங்களின் காதலிகளை நடனமாடிதான் மயக்குவார்களாம். வாருங்கள் இதனைப் பற்றி சுவாரசிய உண்மைகளைப் பார்ப்போம்.

இந்தப் பறவைகள் பசிஃபிக் கடலில் உள்ள பப்புவா நியூ கினியில் தான் அதிகம் காணப்படும். அதாவது மரத்தில் இருக்கும் ஆண் பறவை அழும் குரலில் கூவி, பெண் பறவை வரும் வரை அழைத்துக்கொண்டே இருக்குமாம். பின்னர் அது வந்தவுடன் அதனுடைய இறகுகளை விரித்து பெண் பறவைகளைக் கவரும் வகையில் நடனமாடும். பறவை இனத்திலேயே தன்னுடைய துணையைத் தேர்ந்தெடுத்து கவருவதில் மிகவும் கஷ்டப்படும் ஒரு ஆண் இனம் என்றால் அது இந்த பறவை இனம் தான்.

பெண் பறவை வந்தவுடன் நீலம் மற்றும் கருப்பு நிறங்கள் கொண்ட இறகுகளை விரித்து சிரித்த முகத்துடன் நடனமாட ஆரம்பிக்கும். பார்ப்பதற்கு அதன் நடனம் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் அது பெண் பறவையை கவருவதற்கென தனி நடன ஸ்டெப்ஸ்களைக் கற்றுக்கொள்ளுமாம். அதற்கு ஒரு இடத்தை நன்றாக சுத்தம் செய்து இலைகளை எல்லாம் நீக்கிவிட்டு அந்த இடத்தில் சிவப்பு நிற சிறிய பழங்களைப் போட்டு அலங்கரிக்கும். அனைத்தும் தயாரானவுடன் தனது ஒத்திகையை ஆரம்பிக்கும்.

முழுவதுமாக நடனத்தை கற்றுக்கொண்டப் பிறகுதான் பெண் பறவையை அழைக்கும். அது வந்தவுடன் இசையை எழுப்பிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் கிளைக்கு கிளைத் தாவி, தலைகீழாக ஆடுவது குதிப்பது என உற்சாகமாக நடனமாடும். இவையனைத்தையும் அந்தப் பறவைகள் தங்கள் தந்தையிடம் கற்றுக்கொள்ளும். பின்னர் தான் உருவாக்கிய நடன ஸ்டெப்ஸ்களையும் சேர்த்து ஆடும்.

அதேபோல் எப்படி சுயம்வரத்தில் ஆண்களின் வீரத்தைக் கண்டு தனது மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு அப்போது இருந்ததோ, அதேபோல் தான் அந்த நடனம் பிடித்திருந்தால் மட்டுமே பெண் பறவை அதனைத் துணையாக ஏற்றுக்கொள்ளும். பிடிக்கவில்லை என்றால் யாரும் அதனைக் கட்டாயப்படுத்தமாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
Cassowary: உலகின் மிக ஆபத்தான பறவை.. ஓங்கி ஒதச்சா ஒன்றரை டன் வெயிட்! 
Dancing bird of paradise

அதேபோல் தன் துணையை சந்தோஷப்படுத்த விரும்பும்போதெல்லாம் ஆண் பறவை நடனமாடும். அப்போது அந்த ஆண் பறவைகளைத் தனக்குப் பிடித்தவாரு அலங்காரப்படுத்திக்கொள்ளுமாம் அந்த பெண் பறவை.

நடனம் என்பது மனிதர்களுக்கு மட்டும் கலையல்ல. இந்தப் பறவைக்கும்தான். இன்னும் சொல்லப்போனால் அந்தப் பறவைக்கு அதுதான் வாழ்க்கை என்றே கூறலாம். மேடையின் நடுவில் மட்டுமே ஆடும் இந்தப் பறவையை சொர்க்கத்திற்கு இணையான அழகுக் கொண்டப் பறவை என்று சிலர் வர்ணிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com