ஓரினச் சேர்க்கை பென்குவின் பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?

Penguins
Penguins

மனிதர்களே ஓரினச் சேர்க்கையில் ஈடுபட, உலகம் முழுவதும் எண்ணற்ற எதிர்ப்புகளையும், பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர். ஆனால், ‘தம்மை யார் எதிர்க்கப் போகிறார்?, நாங்கள் வைப்பதுதான் சட்டம்’ என்று சில பென்குவின்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன என்று கூறும்போது ஆச்சர்யமாக உள்ளதுதானே?

முதன்முதலில் இரண்டு பென்குவின்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதை 1998ம் ஆண்டு நியூ யார்க்கில் Central Park Zoo வில் தான் கண்டறியப்பட்டது. அந்த இரண்டு பென்குவின்களுக்கும் ஒரு முட்டை கொடுத்து, அவை அடைக்காக்கும் முட்டையிலிருந்து வெளியே வரும் பென்குவின் பத்திரமாக வருகிறதா? என்பதை சோதித்துப் பார்த்தார்கள். அந்தவகையில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட ராய் மற்றும் சிலோ, அந்த முட்டையை அடைகாத்து டாங்கோ என்ற அழகான பெண் பென்குவினை பத்திரமாக பொரித்தன.

அதன்பின்னரே ஓரினச்சேர்க்கை பென்குவின்கள் அதிகமாகின. சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் ஹாரி மற்றும் பெப்பர் ஜோடி, சிட்னியில் ஸ்பென் மற்றும் மேஜிக் ஜோடி என ஓரினச்சேர்க்கை பென்குவின்கள் அதிகமாகி வந்தன. ஆனால், இந்த ஓரினச்சேர்க்கை பற்றிய விஷயங்கள் அவ்வளவாக வெளியே தெரியவில்லை.

கடந்த 2019ம் ஆண்டு ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரிலுள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்த, இரண்டு ஆண் பென்குவின்கள் ஜோடியே உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. ஏனெனில், இந்த பென்குவின் ஜோடிக்குதான் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, அந்த பென்குவின்களுக்கு முட்டையை அடைகாக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கிருந்த கல்லை முட்டையாகக் கருதிய ஒரு பென்குவின், அடைகாக்கத் தொடங்கியது. இறுதிவரை முட்டை பொரிக்காததால் அது ஏமாற்றமடைந்திருக்கிறது.

இதைக் கண்ட மிருகக்காட்சி சாலையின் நிர்வாகம், அந்தப் பென்குவின்களுக்கு உண்மையான பென்குவின் முட்டை ஒன்றைக் கொடுத்து, அடைக்காப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தது. அதன்பின்னர் குஞ்சும் பத்திரமாக வெளியே வந்தது. பென்குவின்கள் ஆண், பெண் என்ற வித்தியாசங்களை அவர்களுக்குள் பார்க்காது. பென்குவின்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் முட்டையிட்டு அடைகாக்க குறிப்பிட்ட காலம் உண்டு. பெண் பென்குவின் முட்டையிடும். அதை ஆண் பென்குவின் 60 நாட்களாக அடைகாக்கும். ஆண் பென்குவினுக்கான இரையைப் பெண் பென்குவின் வேட்டையாடிக் கொண்டுவரும்.

இதையும் படியுங்கள்:
முருங்கையில் மதிப்புக் கூட்டு பயிற்சி: விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க!
Penguins

இந்த ஓரின்சசேர்க்கை பென்குவின்கள், அந்த இனத்திற்கு மேலும் ஒரு புரிதலை வழங்கியுள்ளது. ஆம்! ஒரு ஆண் மற்றும் பெண் பென்குவின்கள் இணைந்து முட்டை இடுவதை, ஓரினச்சேர்க்கை பென்குவின்கள் அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன. இதனால், அந்தக் குஞ்சுகள் பாலினம் இல்லாத, இரண்டிற்கும் பொதுவான குஞ்சுகளாகவே கருதப்படுகின்றன.

ஓரினச்சேர்க்கை என்பது மதம், இனம், மரியாதை, கொள்கை, நம்பிக்கை சம்பதப்பட்ட ஒரு விஷயம் இல்லை என்பதையும், அது ஒரு அன்பு, இயற்கை, உணர்வு சம்பதப்பட்ட விஷயம் என்பதையும் இந்த பென்குவின்கள் மூலமாவது நாம் அறிந்துக்கொள்வது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com