எல்லா மாதங்களும் மாம்பழம் காய்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்!

Mango
Mango
Published on

பருவம் இல்லாத காலத்தில் நமக்கு மிகவும் பிடித்த ருசியான பழங்கள் மரத்தில் காய்க்கத் தொடங்கினால்? அதுவும் சந்தையில் நல்ல மதிப்பிற்கு போகும் வகைகள் என்றால்?

இது எல்லா நேரத்திலும் இயற்கையாக சாத்தியம் ஆகாது. பின் எப்படி அதை செயற்கையாக விளைவிக்கலாம்! வாருங்கள் அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

அடிப்படைகளைப் புரிந்துகொள்வது:

பருவம் இல்லாத காலத்தில் பழங்களைப் பயிரிடுவதற்கான முதல்படி, பழ மரங்களின் இயற்கையான வளர்ச்சி சுழற்சியைப் புரிந்துகொள்வதே . பெரும்பாலான பழ மரங்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் இயற்கையாகவே பழங்களைத் தரும். இருப்பினும், பருவம் தாண்டிய விளைச்சலை நாம் எதிர்பார்க்கும்போது சற்று நிதானமாக உங்கள் சூழலுக்கு ஏற்றவாறு திட்டம் தீட்டி மரங்களில் சில பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் விவசாயம்:

சீசன் இல்லாத காலங்களில் பழங்களைப் பயிரிடுவதற்கு மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்று கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் வேளாண்மை எனப்படும் Controlled Environment Agriculture (CEA) ஆகும். வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி மற்றும் மண் நிலைமைகள் போன்ற விஷயங்களை சரியாக கையாளுவதன் மூலம். பழம் காய்க்க உகந்த சூழ்நிலையை வரவழைத்து உங்கள் மரங்களை அவற்றின் வழக்கமான பருவத்தையும் தாண்டி பழங்களை உற்பத்தி செய்ய தூண்டலாம்.

Grafting மற்றும் Pruning:

கிராப்ட்டிங்(ஒட்டு மரம்) என்பது நன்றாக வளர்ந்த மரங்களில் இருந்து கிளைகளை வெட்டி புதிதாக முளைத்திருக்கும் சிறிய செடிகளின் தண்டுகளில் ஒட்ட வைத்தால், ஒட்ட வைத்த கிளைகளிலிருந்து வேகமாக பூ பூக்க ஆரம்பித்து பழம் காய்க்கத் தொடங்கும். இதனால் நீங்கள் சாகுபடியை அதிகரிக்கலாம்.

Pruning(ப்ரூனிங்) - காய்ந்த அல்லது தேவையற்ற காய்ந்த கிளைகளை நாம் அகற்றுவதால், பழங்களை உற்பத்தி செய்வதில் மரமானது, அதன் முழு ஆற்றலைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டில் கூட்டு உரம் தயாரித்து, கீரை தோட்டம் அமைத்து, கீரை சத்து பொடியும் நாமே தயாரிக்கலாம்! ரெடியா மக்களே?
Mango

வளர்ச்சியை தூண்டும் ரசாயனங்கள்:

தாவரங்களின் வளர்ச்சியை துண்ட சில ரசாயனங்களைப் பயன்படுத்தி பார்க்கலாம். இதைப் பயன்படுத்துவதன் மூலம், பருவமில்லாத காலங்களில் கூட மரங்களை பூக்கள் மற்றும் பழங்கள் காய்க்கத் தூண்டலாம். இருப்பினும், மரங்களில் எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் தவிர்க்க, இந்த இரசாயனங்களைக் கவனமாகவும், நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் பயன்படுத்துவதும் முக்கியம்.

மண் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை:

பருவம் இல்லாத காலங்களில் பழ சாகுபடிக்கு முறையான மண் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியமானது. மண்ணில் சரியான சமநிலை ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதி செய்வது, ஆரோக்கியமான மர வளர்ச்சி மற்றும் பழ உற்பத்தியை ஊக்குவிக்க உதவும். கரிம உரங்கள்(Organic fertilizers) மற்றும் வீட்டில் சேரும் காய்கறி கழிவுகள் போன்றவை மண்ணை வளப்படுத்த பயன்படுத்தலாம். அதே நேரத்தில் தேவைக்கேற்ப வழக்கமான நீர்ப்பாசனமும் மரங்களின் வளர்ச்சியில் பெரிய பங்கு வகிக்கிறது.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகப்பெரிய 9 பூக்கள் தெரியுமா?
Mango

பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு:

பருவமில்லாத நேரங்களில் பூச்சிகள் மற்றும் பிற நோய்களால் மரங்கள் அதிகம் பாதிக்கப்படலாம். அதற்கு கரிம பூச்சிக்கொல்லிகளைப்(Organic Pesticides) பயன்படுத்துவது மற்றும் உங்கள் மரங்களை சுற்றி நல்ல சுகாதாரத்துடன் கூடிய பராமரிப்பு போன்ற ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை திட்டங்களை கையாண்டால், மரங்களை ஆரோக்கியமாகவும், விளைச்சல் உடையதாகவும் எந்த காலத்திலும் வைத்திருக்க முடியும்.

இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்குதல் மற்றும் மேலே குறிப்பிட்ட சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் வெற்றிகரமான ஆஃப்-சீசன்(பருவம் இல்லாத காலங்களிலும்) பழ உற்பத்தியை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com