தரமான பப்பாளி செடி வளர்ப்பது எப்படி?

Papaya plant
Papaya plant

பப்பாளி பழம் எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்றாக இருக்கிறதோ இல்லையோ பலரும் தங்களது ஆரோக்கியம் கருதி சாப்பிடும் பழமாகக் கண்டிப்பாக இருக்கும். காரணம் அதில் கிடைக்கும் ஊட்டச்சத்து பலன்கள். பப்பாளியை வீட்டில் வளர்த்தால் செலவு மிச்சம் என நினைத்து வீட்டில் வளர்ப்பவர்களும் உண்டு.  விதையை மண்ணில் போட்டால் செடி மரமாகி பழம் பழுத்துவிடும். அவ்ளோதான் என்று. நினைப்பவர்களுக்கு அப்போது தெரியாது. அப்பழத்தின் ருசி எப்படி இருக்கும் என்பது. சுவைத்துப் பார்த்த பின்பே தெரியும் அதன் ருசித் தன்மை. பப்பாளி செடி வளர்க்கும் சில வழிமுறைகளை பார்ப்போம்.   

சரியான விதைகளைத் தேர்ந்தெடுக்கவும்:

 • கடையில் வாங்கிய பப்பாளிப் பழத்திலிருந்து விதைகளை வீணாக்காமல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின் அந்த விதைகளைக் கழுவி, நிழலான இடத்தில் உலர விடவும்.

 • இந்த நன்கு உலர்ந்த விதைகளை இறுக்கமாக மூடிய பாட்டில்களில் டிசம்பர் வரை அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

மண்ணைத் தயாரிக்கவும்:

 • பப்பாளி செடிகள் வளமான, நன்கு வடிகட்டிய மண்ணில் செழித்து வளரும். cocopeat, சாதாரண தோட்ட மண், மண்புழு உரம் (அல்லது வீட்டு உரம்) மற்றும் மாட்டு சாணம் ஆகியவற்றின் சமமான பங்கை எடுத்து ஒரு மண் கலவையை உருவாக்கவும்.

 • மண் இலகுவாகவும், கட்டி தன்மை இல்லாமல்  இருப்பதையும் உறுதி செய்யுங்கள். அப்போதுதான் நம் செடிக்கு நல்ல வடிகால் கிடைக்கும். சில நேரங்களில் தேங்கி நிற்கும் நீர் உங்கள் செடிக்கு  தீங்கு  விளைவிக்கும்.

நடவு செயல்முறை:

 • டிசம்பரில் விதைகளை நடவும். ஒவ்வொரு துளையாய் தோண்டி  ஐந்து விதைகளை வைக்கவும், அவற்றை 1.5 மீட்டர் இடைவெளியில் வைப்பதும் முக்கியம்.

 • ஆரம்பத்தில், ஒரு சிறிய தொட்டியில் அல்லது நாற்று தட்டில் பயன்படுத்துங்கள். அதில் விதைகளை போட்டு அதன் மேல் ஒரு  அடுக்கு மண்ணை  மூடி, தண்ணீரை தெளிக்கவும்.

 • சுமார் 10 நாட்களுக்குள், மண்ணிலிருந்து மரக்கன்றுகள் தோன்றுவதைக் காண்பீர்கள்.

 • முளைத்த மரக்கன்றுடன் நான்கு முதல் ஐந்து இலைகள் வந்தவுடன், அவற்றை ஒரு பெரிய தொட்டியில் மாற்றிவிடுங்கள். பின் ஒரு தொட்டிக்கு  ஒரு மரக்கன்று என தனித்தனியாக நடவும்.

சூரிய ஒளி மற்றும் நீர்:

 • உங்கள் பப்பாளி செடியை அதிக சூரிய ஒளி வீச கூடிய இடத்தில்  வைக்கவும்.

 • அவ்வப்போது சரியான இடைவெளி விட்டு, தினமும் செடிக்கு தண்ணீர் பாய்ச்சி விடுங்கள்.

 • பூச்சிகள் வராமல்  இருக்க, செடியைச் சுற்றி வேப்பம் சாறுகளை தூவிவிடுவதும் நல்லது .

கூடுதல் கவனிப்பு:

 • மாதந்தோறும் செடியில் சிறிது மாட்டு சாணத்தை சேர்க்கவும்.

 • செடி வளரும் போது, ​​அதை நன்கு பராமரிக்க வேண்டும்.

 • பப்பாளிக்கு போதுமான சூரிய ஒளி தேவைப்படுகிறது, எனவே மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடவு செய்வது நல்லது.

 • நீங்கள் ஆசைப்பட்ட அறுவடை காலம்  8 முதல் 10 மாதங்களில் தயாராகிவிடும். குளிர்காலம் நெருங்கும்போது பழங்கள் வளர ஆரம்பிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com