ஒரு நாட்டின் வளர்ச்சியைக் குறிக்கும் மிக முக்கிய காரணியாக மின்சார ஆற்றல் உள்ளது. ஏனெனில் இதைப் பொறுத்துதான் ஒரு நாடு எப்படி இயங்குகிறது என்பது தெரியும். நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு ஆற்றலின் பயன்பாடு மிக முக்கியம். அதுமட்டுமின்றி அந்த ஆற்றல் வளர்ந்த நிலையில் உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், உற்பத்தியாகும் ஆற்றல் மக்களால் வாங்கப்படும் அளவிலும், பயன்படுத்தப்படும் அளவிலும் சரியாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவு மூலமாக இந்தியாவின் மின்சார ஆற்றலின் நிலை தற்போது எந்த அளவில் இருக்கிறது எனத் தெரிந்து கொள்ளலாம்.
உலக அளவில் பயன்படுத்தப்படும் ஆற்றலுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் மூன்றில் ஒரு பங்கு ஆற்றலை தான் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவின் மின்சார ஆற்றலின் நிலையும் இப்படி தான் உள்ளது. மேலும் இந்த ஆற்றல் வளர்வதற்கான சவால்களும் அதிகம் உள்ளது. பல வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா முன்னேற, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை உருவாக்குவதில் நாம் முன்னேற வேண்டும். அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது தனிமனித மின்சார பயன்பாட்டின் விகிதம் 10 மடங்கு குறைவாகவே இந்தியாவில் உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு முதலில் நிலக்கரி, எண்ணெய் போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்து, புதுப்பிக்க ஆற்றல் முறைகளான காற்று மின்சக்தி, சூரிய மின்சக்தி, பயோ கேஸ் போன்றவற்றின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட வேண்டும். இது சவாலானதாக இருந்தாலும் நமக்கான ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யும்.
2030க்குள் இந்தியாவில் 500 ஜிகாவாட் மின் உற்பத்தி இலக்காக உள்ளது. இதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து இன்றைய நிலவரப்படி சராசரியாக 160 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதில் சூரிய மின்சார சக்தியின் பங்கு அதிகம். எனவே இதில் எல்லாம் அதிகம் கவனம் செலுத்தினால் நமக்கு தேவையான அதிகப்படியான ஆற்றலை சூரிய ஒளியிலிருந்து நாம் பெற முடியும். இதன் மூலமாக சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இந்தியாவின் மின்சக்தி தேவையை நிறைவேற்றலாம்.
இந்தியாவில் 748 ஜிகோவாட் அளவுக்கான ஆற்றல் வளம் இருப்பதாக தேசிய சூரிய மின்சக்தி நிறுவனம் கணக்கிட்டுள்ளது. ஆனால் இதை உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறதா என்பதுதான் கேள்விக்குறி?