இத திருடி என்னடா பண்றீங்க?

 Illegal mining of coral reefs.
Illegal mining of coral reefs.
Published on

ராமேஸ்வரம் கடல் பகுதியில் சட்ட விரோதமாக பவளப்பாறைகளை வெட்டி எடுக்கப்பட்டு பக்தர்களிடம் பொய்யான காரணத்தை கூறி விற்பனை செய்யும் செயல் அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடல் பகுதியை ஒட்டி உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி கடல்வாழ் உயிரினங்களுக்கான தேசிய பூங்காவாக செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் இருக்கும் பவளப்பாறைகள் இயற்கைக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பாக இருந்து வருகிறது. பவளப்பாறைகள் இருக்கும் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றன.

கடல் பகுதி அதிகமாக வெப்பமடையாமல் பாதுகாப்பதில் பவளப்பாறை முக்கிய பங்காற்றுகிறது. உயிரினங்களுக்கான உணவுப் பொருளாகவும் பவளப்பாறைகள் விளங்குகின்றன. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட பவளப்பாறை திருட்டு ராமேஸ்வரம் பகுதியில் அதிகரித்து இருக்கிறது.

ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலுக்கடியில் இருந்து பவளப்பாறைகள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு அவை ராமர் பாலம் கட்டிய கல் என்று தண்ணீரில் மிதக்க வைத்து காட்டி வரும் பக்தர்களிடம் விற்பனை செய்கின்றனர். 100 கிராம் எடை கொண்ட பவளப்பாறையை 1000 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க செயற்கை பவளப்பாறை!
 Illegal mining of coral reefs.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பவளப்பாறை 2000 ஆண்டு காலம் வாழக்கூடிய தன்மை கொண்டது. கடலில் இருந்து வெளியே எடுத்தால் அவை உடனே இறந்து விடும், இந்த நிலையில் பலரும் பணத்திற்காக பவளப்பாறையை கடலில் இருந்து எடுப்பது கடல் வாழ் உயிரினங்களுக்கும், கடலின் இயற்கை சூழலுக்கும் பாதிப்பாக அமையும் என்று சூழலில் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடலோர காவல் படையினர், பாதுகாப்பு படையினர் மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து பவளப்பாறைகளை வெட்டி சட்ட விரோதமாக எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 இன் கீழ் அது குற்றம் ஆகும் என்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com