ஒரே கடியில் 100 பேரை கொல்லக்கூடிய பாம்பு எது தெரியுமா? 

Inland Taipan
Inland Taipan
Published on

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் காணப்படும் ஒரு மர்மமான ஆபத்து நிறைந்த உயிரினம், ஒரே கடியில் 100 பேரை கொல்லக்கூடிய விஷத்தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் பெயர்தான் Inland Taipan. சுமார் 2 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய இந்த பாம்பின் வாழ்விடங்கள், நடத்தை, உடல் அமைப்பு மற்றும் விஷத்தின் தாக்கம் பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம். 

Inland Taipan பாம்புகள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவை அடர்ந்த காடுகள், புல்வெளிகள் மற்றும் பாறை இடுக்குகள் போன்ற பல்வேறு இடங்களில் வாழ்கின்றன. தனித்தே வாழும் தன்மை கொண்ட இந்த பாம்புகள், இரவில் வேட்டையாடும் விலங்குகளாகும். எலிகள், பல்லிகள் மற்றும் பறவைகள் போன்ற சிறிய விலங்குகளை அவை உணவாக உட்கொள்கின்றன. 

இந்த பாம்புகளின் உடல் தடிமனான, சாம்பல் நிறத்தில் இருக்கும். அவற்றின் தலையானது பெரிதாகவும், முக்கோண வடிவத்திலும் இருக்கும். இவற்றின் விஷம் உண்மையிலேயே அசாதாரணமானது. இது நியூரோ டாக்ஸின்கள் மற்றும் ஹீமோ டாக்ஸிங்களின் சக்தி வாய்ந்த கலவையினால் ஆனது. அவை பக்கவாதம், உள் ரத்தப்போக்கு மற்றும் உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தும். ஒரே கடியில் சுமார் 100 பேரை கொல்லும் அளவுக்கு இவற்றின் விஷம் வீரியம் கொண்டது. இருப்பினும், இந்த பாம்பின் விஷத்தை முறிக்கும் அளவுக்கு ஆன்டிவெனோம் கிடைப்பதால், இவை கடிப்பதால் ஏற்படும் இறப்புகள் மிகவும் அரிதானவை. 

ஆஸ்திரேலியாவில் பாதுகாக்கப்பட்ட இனமாக கருதப்படும் இந்த பாம்புகள், சமூகவிரோதிகளால் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. குறிப்பாக, அவற்றின் விஷம் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் விலை மதிப்புடையது என்பதால், அதிகமாக கொல்லப்படுகின்றன. இதன் காரணமாகவே அவற்றின் வாழ்விடங்களை பாதுகாத்தல், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. 

Inland Taipan பாம்புகள் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இவற்றின் நடத்தைகளை புரிந்துகொள்வதன் மூலம், நமக்கும் பாம்புகளுக்கும் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com