டால்ஃபின்கள் பற்றிய சுவாரசியமான உண்மைகள்!

Interesting facts about dolphins.
Interesting facts about dolphins.

ர்மங்கள் நிறைந்த ஆழ்கடல் பல அசாதாரண உயிரினங்களின் இருப்பிடமாக இருந்து வருகிறது. இவற்றில் மிகவும் அறிவுத்திறன் வாய்ந்த வசீகரிக்கும் தோற்றத்துடன் டால்ஃபின்கள் தனித்து வாழ்கின்றன. இத்தகைய டால்ஃபின்கள் குறித்த சில சுவாரசியமான உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளலாம். 

  1. டால்பின்கள் உண்மையிலேயே டால்பினிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை. இது பல்வேறு வகையான உயிரினங்களை உள்ளடக்கிய குடும்பமாகும். இதில் நாம் அனைவரும் அறிந்த பாட்டில்நோஸ் டால்பின்கள் முதல், அதிகம் அறியப்படாத அமேசான் நிதி டால்பின்கள் வரை உலகம் முழுவதும் தோராயமாக 90 வெவ்வேறு வகையான டால்பின் இனங்கள் உள்ளன.

  2. டால்ஃபின்கள் சமூகமாக வாழும் உயிரினம். இவை Pods எனப்படும் குழுக்களாக வாழ்கின்றன. இதனால் மற்றவை இதை வேட்டையாடுவதிலிருந்து பாதுகாப்புடன் வாழ்கிறது. 

  3. டால்ஃபின்கள் எக்கோ லொகேஷன் எனப்படும் ஒரு அசாதாரண திறனைக் கொண்டுள்ளது. அவை அவ்வப்போது துள்ளி குதிப்பது மூலமாக, ஒலி அலைகளை வெளியிட்டு, அதனால் திரும்ப வரும் எதிரொலிகள் மூலமாக எதிரே உள்ள பொருட்களை அறிந்து கொள்கிறது.

  4. உலகில் வாழும் பல புத்திசாலி இனங்களில் டால்ஃபின்கள் முதன்மையாகக் கருதப்படுகின்றன. இவற்றின் கடினமான சிக்கலை தீர்க்கும் தன்மை, நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் போன்றவற்றை ஆய்வாளர்கள் இன்றளவும் ஆய்வு செய்து வருகின்றனர். மற்ற விலங்குகள் போலல்லாமல் டான்ஃபின்கள் வாழ்நாள் முழுவதும் திறன்களைக் கற்கும் தன்மை படைத்தது. 

  5. இவை நம்ப முடியாத அளவிற்கு சுறுசுறுப்பாக நீந்திச்செல்லும் உயிரினங்களாகும். இவற்றால் தண்ணீரில் இருந்து வெளியே குதித்து பல சுழற்சிகள் செய்து தண்ணீரில் மீண்டும் குதிக்க முடியும். இதைக் காண்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.

  6. தாய் டால்பின்களால் தன் வயிற்றுக்குள் இருக்கும் பிறக்காத குட்டிகளுடனும் தொடர்பு கொள்ள முடியும். குறிப்பிட்ட ஒலியை உருவாக்கி, குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே அவற்றின் மொழியை கற்றுக் கொள்கின்றன. 

  7. டால்ஃபின்களின் தூக்க முறை முற்றிலும் வித்தியாசமானது. அவை மற்ற உயிரினங்களால் வேட்டையாடப்படுவதில் இருந்து தப்பிக்க, நீந்திக்கொண்டே தூங்கும் தன்மை படைத்தது. இதனால் டால்ஃபின்கள் ஒரே இடத்தில் தூங்குவதற்காக நேரம் ஒதுக்குவதில்லை. 

  8. கடல் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் டால்ஃபின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மற்ற விலங்குகளுக்கு எவ்விதமான அச்சுறுத்தலையும் கொடுப்பதில்லை என்பதால், உணவுச் சங்கிலியை பெருமளவுக்கு பாதுகாக்கிறது. இதனால் ஆரோக்கியமான கடல் சூழல் உருவாகிறது.

இப்படிப்பட்ட பல அதிசய குணங்கள் கொண்ட டால்ஃபின்கள், மனிதர்களின் சுய லாபத்துக்காக கொல்லப்படுகின்றன. அவற்றால் இந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என்ற போதிலும், மனிதர்களால் டால்ஃபின்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. எனவே இந்த நம்ப முடியாத உயிரினத்தின் பண்புகளை உணர்ந்து, நம் எதிர்கால தலைமுறையும் இவற்றைப் பற்றி அறிவதற்கான வாய்ப்பை நாம் வழங்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com