ஆள்காட்டி விரல் அளவில் இருக்கும் கரையான் ராணி பற்றிய சுவாரசிய தகவல்கள்!  

Termite Queen
Termite Queen
Published on

பூமியின் மிகவும் சிக்கலான சமூக அமைப்புகளில் ஒன்றைக் கொண்டிருக்கும் கரையான்கள், இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்றாகும். இந்த சமூகத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்துவமான பங்கை வகிக்கின்றன. ராணி கரையான் இந்த சாம்ராஜ்யத்தின் இதயமாக விளங்குகிறது. இந்த இனத்தின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக லட்சக்கணக்கான முட்டைகளை இட்டு, புதிய தலைமுறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்தப் பதிவில் ஆள்காட்டி விரல் அளவுக்கு இருக்கும் கரையான் ராணியின் வாழ்க்கை முறை, அதன் தனித்துவமான பண்புகள் போன்றவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

கரையான் ராணியின் வாழ்க்கை முறை: 

ஒரு கரையான் கூட்டில், ஒரே ஒரு கரையான் ராணி மட்டுமே பாலியல் ரீதியாக முழுமையான பெண் கரையான் ஆகும்.‌ ஒரு ராணி கரையான் இறக்கும்போது, அதன் முட்டைக் கூட்டிலிருந்து புதிய ராணி கரையான் உருவாகும். புதிய ராணி கரையான் சிறகுகள் கொண்ட இளவரசி கரையானாக இருக்கும்போது, இனப்பெருக்கத்திற்காக இணைந்த பின்னர் தனது சிறகுகளை உதிர்த்து கூட்டிட்டுக்குள் திரும்பும். 

ராணி கரையான் தனது வாழ்நாள் முழுவதும் முட்டையிட்டு இனத்தை பெருக்குகிறது. சில ராணிகள் 20 ஆண்டு காலத்திற்கும் மேலாக வாழக்கூடியவை. தங்கள் வாழ்நாளில் பல மில்லியன் முட்டைகளை இவற்றால் இட முடியும். ராணி கரையான் தனது வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை முட்டையிடுவதிலும் கூட்டை பராமரிப்பதிலும் செலவிடுகிறது. 

கரையான் ராணியின் தனித்துவமான பண்புகள்: 

ராணி கரையான் மற்ற கரையான்களை விட மிகப் பெரியது, சில சமயங்களில் ஆள்காட்டி விரல் அளவுக்கு கூட வளரக்கூடியது. ராணி கரையானின் உடல் முட்டையிடுவதற்கு ஏற்றவாறு பெரிதாகவும், வீங்கியதாகவும் இருக்கும். இதன் இறக்கைகள் இனப்பெருக்கத்திற்கு பிறகு உதிர்த்து விடப்படுகின்றன. அதன் பின்னர், அதிக அளவு பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்து, மற்ற கரையான்களை கட்டுப்படுத்தவும், இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. 

தொழிலாளர் கரையான்கள் ராணி கரையானை நன்றாக கவனிக்கின்றன. அவை ராணிக்கு உணவு கொடுப்பது, சுத்தம் செய்வது மற்றும் அதன் முட்டைகளைப் பாதுகாப்பது போன்ற வேலைகளை செய்கின்றன. கரையான் சமூகத்தில் ராணியின் முக்கியத்துவம் என்று பார்க்கும்போது, இனப்பெருக்கம் முதன்மையான ஒன்றாகும். 

இதையும் படியுங்கள்:
கொள்ளை அழகு கிளியோபாட்ரா: வரலாற்று நாயகி, எகிப்தின் கடைசி ராணி!
Termite Queen

ராணி கரையான், கரையான் சமூகத்தை ஒன்றிணைத்து, அதன் பாலின ஹார்மோனால் மற்ற கரையான்களை கட்டுப்படுத்த உதவுகிறது. ராணி இல்லாமல் கரையான்கள் தங்கள் வேலைகளை சரியாக செய்ய முடியாமல் அதன் சமூகமே சிதைந்து போகும். ராணி கரையான் ஒரு சிறப்பு சுரப்பியை கொண்டுள்ளது. இது கரையான் புற்றுக்குள் பூஞ்சைகளை வளர்க்க உதவுகிறது. இந்த பூஞ்சை கரையான்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாகும். 

ராணி கரையான், தன் சமூகத்தை பூச்சிகள் மற்றும் பிற வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஒரு சிறப்பு சிக்னலை வெளியிட்டு தொழிலாளர் கரையான்களை தாக்குதலை எதிர்கொள்ள தயார் செய்கிறது. இப்படி ஒரு சிக்கலான சமூக அமைப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது கரையான் ராணி. ஒரு ராணி இந்த அளவுக்கு தன் சமூகத்தை பாதுகாப்பதை இப்போதுதான் நாம் கேள்விப்படுகிறோம். இது உண்மையிலேயே ஆச்சரியமான ஒன்றுதான். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com