இதய வடிவ முகம் கொண்ட அரிய வகை ஆந்தை இனம்!

Sri Lanka bay owl
Sri Lanka bay owl
Published on

மனிதர்கள் பார்வையில் மிக அரிதாக தென்படும் சில பறவைகளில் ‘சிலோன் பே ஓவ்ல்’ (Ceylon Bay Owl) எனப்படும் இலங்கை விரிகுடா ஆந்தை என்ற இரவு நேரப் பறவையும் ஒன்று. இது ‘போடிலஸ் அசிமிலிஸ்' வகை ஆந்தை குடும்பத்தை சேர்ந்தது. இந்த வகை ஆந்தை இனங்கள் இலங்கை தீவு மற்றும் தென்மேற்கு இந்தியாவின் கேரளாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே பரவலாக காணப்படுகிறது. உலகின் வேறு சில இடங்களிலும் காணப்படுகின்றன. இது முன்னர் ஓரியண்டல் பே ஆந்தை ஃபோடைலஸ் பேடியஸின் Oriental Bay Owl (Phodilus bateau) கிளையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது அழைப்பு மற்றும் இறகுகளில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு தனி இனமாகக் கருதப்படுகிறது.

இதய வடிவிலான முகம், பருத்த உடல், குறுகிய கால்கள், அடர்பழுப்பு நிறமும், உடலின் கீழ் பாகம் சிதறிய கருப்பு புள்ளிகளுடன் காணப்படும். பெரிய இருண்ட கண்கள் கொண்ட சிறிய ஆந்தை இனமாகும். அலகு மஞ்சள் நிறத்தில் உள்ளது.

இது சுமார் 9.8 முதல் 11.8 அங்குல நீளமும், இறக்கை 192-208 மி.மீ நீளமும், வால் 81-90 மி.மீ நீளமும் மற்றும் 0.5 பவுண்டுகள் எடையும் கொண்டது.

பொதுவாக, இலங்கை விரிகுடா ஆந்தைகள், ஈரப்பதமான, பசுமையான மற்றும் அரை பசுமையான காடுகள், மலைச் சரிவுகள், இலையுதிர் காடுகள், சதுப்பு நிலக்காடுகளில் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 2200 மீ உயரம் வரை உள்ள வெட்டப்பட்ட காடுகளில் வாழ்கின்றன.

சிறிய உயிரினங்கள், எலிகள், வவ்வால்கள், சிறிய பறவைகள், பல்லிகள், தவளைகள், வண்டுகள் மற்றும் வெட்டுக்கிளிகள் போன்றவற்றை உட்கொள்ளும். இந்த ஆந்தைகள் பகல் நேரத்தில் மரத்தின் பொந்துகளில் மறைந்து வாழும். இரவு நேரங்களில் வேட்டையாடும். கூச்ச சுபாவம் கொண்ட இந்த ஆந்தைகளை பகலில் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். அவை மந்தைகளிலிருந்து பிரிந்து இருக்க விரும்புகின்றன, ஆனால் சில நேரங்களில் அவை ஜோடிகளை உருவாக்கி குடும்ப உறுப்பினர்களுடன் ஒட்டிக்கொள்கின்றன.

வசந்த காலம் இவற்றின் சிறந்த இனப்பெருக்க காலமாகும். அதாவது இந்திய பகுதிகளில் மார்ச் முதல் மே வரை இந்த ஆந்தைகள் இனப்பெருக்க காலம் ஆகும். மரக்குழிகளில் கூடுகள் அமைத்து முட்டையிட்டு அடை காக்கின்றன. இவை உணவுக்காக இடம் பெயரும். குளிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், அவை தெற்கு பகுதிகளுக்கு பறக்கின்றன.

இந்த ஆந்தைகள் குறைந்த அளவிலான எண்ணிக்கையில்தான் உள்ளன. இயற்கையின் படைப்பில் மனிதர்களால் அதிகம் அறியப்படாத பறவைகளில் இதுவும் ஒன்று.

இதையும் படியுங்கள்:
ஆபத்தான இந்த ஆந்தை இனம் பற்றி தெரியுமா? 
Sri Lanka bay owl

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com