இந்தியா சிந்து நதியை தடுத்ததுபோல, சீனா பிரம்மபுத்திரா நதியை தடுக்குமா?

Brahmaputra River
River Indus
Published on

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலில் 27 இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா,  பாகிஸ்தானுடனான சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் பல முறை இந்தியாவுடன் போரிட்டுள்ளது. அப்போதெல்லாம் கூட இந்திய அரசு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை உடைத்தது இல்லை. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நாம் என்ன செய்தாலும் சிறிய தகராறோடு வழக்கம்போல இந்தியா பிரச்னையை மறந்துவிடும், என்ற பாகிஸ்தானின் எண்ணத்தில் இந்த விஷயம் நெருப்பை அள்ளி வீசியுள்ளது. பாகிஸ்தான் இதை ஒரு 'போர் நடவடிக்கை' என்று கூறியுள்ளது. 

சிந்து நதி நீர் ஒப்பந்தம்:

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 1960 ஆம் ஆண்டு சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சிந்துநதி அமைப்பில் உள்ள சிந்து, செனாப் மற்றும் ஜீலம் நதிகளின் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இது சிந்து நதிநீர் அமைப்பின் நீரில் 80 சதவீதமாகும். அதே நேரத்தில், இந்தியாவுக்கு ராவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகிய ஆறுகள் ஒதுக்கப்பட்டன.

பாகிஸ்தான் சிந்து நதியை மட்டும்தான்  விவசாயத்திற்கும் 80% நம்பியுள்ளது. அதன்  மின்சார உற்பத்தியும் நீர்மின் நிலையங்களை தான் பெருமளவில் நம்பியுள்ளது. சிந்து நதிநீர் நிறுத்தப்படும்போது மின்சாரம் மற்றும் உணவுக்கு பெருமளவில் பாகிஸ்தான் பாதிக்கப்படும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட  பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியில் மிகப்பெரிய அடியாகும். 

இதற்கு பழிவாங்க பாகிஸ்தான் சீனாவிடம் இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திரா நதியை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. சமூகவலையில் பாகிஸ்தானியர்கள் தொடர்ச்சியாக சீனாவிடம் பிரம்மபுத்திரா நதியை நிறுத்தி இந்தியாவிற்கு பாடம் புகட்ட வற்புறுத்துகின்றனர். இந்தியாவுடன் எந்த ஒப்பந்தமும் இல்லாததால் சீனா தன்னிச்சையாகவே பிரம்மபுத்திரா நதியை தடுக்கலாம் என்று வாதிடுகின்றனர். 

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் முக்கியமான அகழி அமைப்புகள் பற்றி அறிவோமா?
Brahmaputra River

விஷயம் இவ்வாறு இருக்க பிரம்மபுத்திரா நதி மட்டுமல்ல, சிந்து நதிக்கும் உண்மையான உரிமையாளர் சீனாதான். நடக்கும் மோதலில் மிகப்பெரிய டிவிஸ்ட் சீனா நினைத்தால் இந்தியாவிற்கு வரும் சிந்து நதியையும் சேர்த்தே தடுக்க முடியும்.

சிந்துநதி சீனாவின் கைலாஷ் மலைத்தொடரின் மானசரோவர் ஏரிக்கு அருகிலுள்ள போகர் சூ இடத்தின் அருகேயுள்ள ஒரு பனிப்பாறையிலிருந்து உருவாகிறது. சீனாவில் உருவாகும் சிந்து நதி இந்தியாவின் லடாக், ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு செல்கிறது. பிரம்மபுத்திரா நதியும் மானசரோவர் ஏரிக்கு அருகில் உற்பத்தியாகி அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியா வந்து பின்னர் வங்கதேசத்திற்கு செல்கிறது.

சீனா நினைத்தால் இரண்டு நதியையும் தடுக்க முடியும். ஆனால், தடுக்கவும் முடியாது. காரணம் சீனா சிந்து நதியை தன் எல்லையில் தடுத்துவிட்டால் அதன் பாதிப்பு பாகிஸ்தானுக்குதான். சீனா அவ்வாறு செய்தால் பாகிஸ்தான் சீனாவின் எதிரியாக மாறும், இது இந்தியாவிற்குதான் சாதகம்.

அதேபோல பிரம்மபுத்திரா நதியை தடுத்து விட்டால் அதன் பாதிப்பு சீனாவின் புதிய நட்பு நாடான வங்கதேசத்திற்கு தான் அதிகம். விவசாயம் , நீர் , மின்சாரம், வாழ்வாதாரம் என வங்கதேசம் அனைத்திற்கும் பிரம்மபுத்திரா நதியை தான் நம்பியுள்ளது.சிந்து நதியை விட பெரிய கடல் போன்ற இந்த பிரம்மாண்ட நதியின், மீன் வளத்தின் மூலம் லட்சக்கணக்கான வங்கதேசிகள் வாழ்க்கை வளம் பெறுகிறது.இந்த நதி தடைபட்டால் வங்கதேசத்தில் பெரிய பஞ்சம் ஏற்படும்.

எனவே சீனா எந்த நதியை தடுத்தாலும் பாதிப்பு அதன் நட்பு நாடுகளுக்குதான் என்பதால் இந்த திட்டங்களை அதனால் செயல்படுத்த முடியாது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு நீர் விவகாரத்தில் நடுவில் இருக்கும் இந்தியாதான் நாட்டாமையாக இருக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
உலக பிரசித்தி பெற்ற நீரூற்றுகளும் அவற்றின் வகைகளும் சிறப்புகளும்!
Brahmaputra River

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com