JN1: கேரளாவில் புதுவகை கொரோனா!

JN1: New type Corona in Kerala!
JN1: New type Corona in Kerala!

கேரள மாநிலத்தில் ஜெ என் 1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி இரண்டு வருட காலம் ஒட்டுமொத்த உலக நாடுகளின் இயல்பு நிலையை பெருமளவில் பாதித்தது. இதைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவுகள் மூலமாக நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் தடுப்பு மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகள் உருவாக்கப்பட்டு அவற்றை மக்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது பல்வேறு நாடுகளில் கட்டாய சட்டமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தனது பரிணாம நிலையில் தொடர் மாற்றத்தை கண்டு வருகிறது. இவ்வாறு தற்போது லக்ஸம்பாக்கில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது பிஏ 2.86 திருப்பு என்று கூறப்படுகிறது. இது ஜெ என் 1 என அழைக்கப்படுகிறது. இந்த கொரோன பரவல் தற்போது கேரளா மாநிலத்தில் பரவி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து இருப்பது, "ஜெ என் 1 கொரோனா வைரஸ் தொற்று கேரள மாநிலத்தில் பரவியிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 79 வயது பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் கேரள மக்கள் பயப்பட தேவையில்லை, இந்த புதிய வைரஸ் தொடர்பாக அனைத்து விஷயங்களும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இணை நோய் உள்ளவர்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கொரோனா பரவல் முதியோர் , இணை நோயாளிகள் கவனம் தேவை!
JN1: New type Corona in Kerala!

மேலும் இந்த புதிய வகை கொரோனா தொற்று ஏற்கனவே பிற மாநிலங்களில் பரவி இருக்க வாய்ப்பு இருக்கிறது. கேரள மக்கள் கவலை பட தேவையில்லை அரசு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com