
பொதுவாக, உணவு இல்லாமல் கூட இருந்துவிடலாம், ஆனால் யாராலும் நீர் அருந்தாமல் மட்டும் வாழவே முடியாது என்று கூறுவார்கள். ஆனால், அந்தக் கூற்றை உடைக்கவும் இயற்கை ஒரு உயிரினத்தைப் படைத்திருக்கிறது. ஆம்! அந்த நீரே அருந்தாத உயிரினத்தைப் பற்றிதான் இப்போது பார்க்கவுள்ளோம்.
பாலைவனங்களில் மட்டுமே வாழும் இந்த உயிரினம், விதைகள், பீன்ஸ்கள் போன்றவற்றை சாப்பிடுகின்றன. சில நேரங்களில் சிறிய அளவிலான பூச்சிகளை உணவாக எடுத்துக்கொள்கின்றன. கொஞ்சம் நிறைய விதைகளையும் பீன்ஸ்களையும் எடுத்து தங்களது துளைகளில் வைத்துக்கொள்ளுமாம். மணல் மற்றும் மணல் சார்ந்த பகுதிகளில் இருக்கும் இந்தத் துளை, அந்த விதைகளிலிருக்கும் ஈரப்பதத்தை 30 சதவீதம் உறிஞ்சுகிறது. இப்படி நீரே குடிக்கமாட்டேன் என்றிருக்கும் இந்த விலங்கின் பெயர், கங்காரு எலி.