மனதை மயக்கும் அழகான பிங்க் நிற ஜீவராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்!

கிரேட்டர் ஃபிளமிங்கோ
கிரேட்டர் ஃபிளமிங்கோ
Published on

1. கிரேட்டர் ஃபிளமிங்கோ  (Greater Flamingo): பிங்க் நிற இறகுகள் கொண்ட இந்தப் பறவை ஒரு உயரமான அழகான பறவையாகும். தான் உண்ணும் உணவின் அடிப்படையில் வெளிர் நிறத்தில் இருந்து துடிப்பான பிங்க் நிறத்தைப் பெறுகின்றன. இவற்றிற்கு நீண்ட மெல்லிய கால்கள் இருப்பது ஒரு முக்கிய அம்சமாகும். இவை ஆழமற்ற நீரில் அளைவதற்கு உதவுகின்றன.

இவற்றின் அலகுகள் கருப்பு முனையுடன், கீழ் நோக்கி வளைந்து உள்ளன. தண்ணீரில் மீன்  போன்ற உயிரினங்களை வடிகட்டி  உண்ண இது பயன்படுகிறது. ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் தெற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில், ஆழமற்ற ஏரிகள், தடாகங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் சேற்று நிலங்களில் காணப்படுகின்றன.

ஆர்க்கிட் மாண்டிஸ்
ஆர்க்கிட் மாண்டிஸ்

2. ஆர்க்கிட் மாண்டிஸ்  (Orchid Mantis): இது ஆர்க்கிட் பூக்கள் போன்ற அற்புதமான வடிவத்துடன் கூடிய ஒரு பூச்சியாகும். இதனுடைய உடல் பிங்க் நிறத்தில் அல்லது ஊதா  நிறத்துடன் கூடிய வெள்ளை நிறத்தில் உள்ளது. இது ஒரு ஆர்க்கிட் மலரின் இதழ்களை பிரதிபலிக்கிறது. இதன் கால்களின் வடிவம் வண்ண மலரின் இதழ்களைப் போல் தோற்றமளிக்கின்றன. இது பதுங்கி இருந்து இரையை வேட்டையாடும் குணம் கொண்டது. இதனுடைய உடல் சற்றே தட்டையாகவும் அகலமாகவும் இருக்கிறது.

தென்கிழக்கு ஆசியாவின் மழைக்காடுகளில், குறிப்பாக மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் காணப்படுகின்றன. தங்கள் உருவங்களை மறைப்பதில் வல்லமை மிக்கவை. வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் தேனீக்கள் போன்றவற்றை பூக்களுடன் நன்றாக கலந்து பதுங்கி இருந்து உண்கின்றன. துல்லியமான வேட்டை நுட்பத்திற்காக இந்த பூச்சிகள் அறியப்படுகின்றன.

3. யானை பருந்து அந்துப்பூச்சி (Elephant Hawk Moth): அழகான பிங்க் மற்றும் ஆலிவ் பச்சை நிறமுடைய ஒரு பூச்சியாகும். இதன் இறக்கைகள் நீளமாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இவை இளம் சிவப்பு, ரோஸ் மற்றும் பச்சை நிறங்களின் அழகான கலவையுடன் பூக்களின் மத்தியில் தங்கள் உருவத்தை மறைத்துக் கொள்ளும். பூக்களில் இருந்து தேனை உண்ணும்.

யானை பருந்து அந்துப்பூச்சி
யானை பருந்து அந்துப்பூச்சி

கம்பளிப் பூச்சியின் தண்டு போன்ற வடிவம் யானையின் தும்பிக்கையை ஒத்திருப்பதால் இவை இந்தப் பெயரை பெற்றன. இந்தப் பூச்சி இனம் ஐரோப்பா முழுவதும் இங்கிலாந்து உட்பட ஆசியாவின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இவை தோட்டங்கள் வனப்பகுதிகள் மற்றும் ஏராளமான பூச்செடிகளை கொண்ட பகுதிகளில் வாழ்கின்றன.

4. காலா (Galah): இது ஒரு வகையான கிளி. இதனுடைய தலை, மார்பு மற்றும் அடிப்பகுதி மென்மையான பிங்க் நிறத்திலும், பின்பகுதி இறக்கைகள் மற்றும் வால் ஆகியவை  வெளிர் சாம்பல் நிறத்திலும்  இருக்கும். இதன் தலையில் இளம் சிவப்பு இறகுகளில் தனித்துவமான முகடு போன்ற அமைப்பு உள்ளது. இது உற்சாகமாக அல்லது பதற்றமாக இருக்கும்போது இந்த முகடை உயர்த்தும்.

காலா
காலா

ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த சமூகப் பறவைகள் வனப்பகுதிகள், புல்வெளிகள் மற்றும் நகர்ப்புற பகுதியில் சத்தம் இல்லாத மந்தைகளில் காணப்படுகின்றன. இவை விளையாட்டுத்தனமான புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்றவை. மனித பேச்சுக்கள் ஒலிகளை மிமிக்ரி செய்வதில் வல்லமை பெற்றவை.

ரோசாட் ஸ்பூன்பில்
ரோசாட் ஸ்பூன்பில்

5. ரோசாட் ஸ்பூன்பில் (Roseate Spoonbill): இந்தப் பறவை இளம் பிங்க் முதல் ஆழமான ரோஜா வரை தோற்றமளிக்கும். இதனுடைய தலை பச்சை கலந்த நீலத்தில் இருக்கும். சிவப்பான கண்களும் நீண்ட கழுத்தும் அகலமான இறக்கைகளும் இவற்றுக்கு உண்டு.

இதையும் படியுங்கள்:
'பசுமை நகரங்கள்' பற்றித் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
கிரேட்டர் ஃபிளமிங்கோ

கரீபியன், மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள ஈர நிலங்களில் இவை காணப்படுகின்றன. இவை ஆழமற்ற உவர் நீரை விரும்புகின்றன. இவை தான் உண்ணும் உணவிலிருந்து இவற்றின் இறகுகள் பிங்க் நிறத்தை அடைகின்றன. சிறிய மீன்கள் ஒட்டு மீன்கள் மற்றும் பூச்சிகளை பிடித்து உண்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com