மனித முகம் கொண்ட பூச்சி பற்றி தெரியுமா? அடேங்கப்பா! 

Man Faced Stink Bug
Man-faced insect
Published on

மனித முகப் பூச்சி என்பது இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் சில தீவு நாடுகளில் காணப்படும் ஒரு தனித்துவமான வண்டு வகை பூச்சியாகும். இதன் பின்புறம் மனித முகத்தைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருப்பதால், இது இந்த பெயரால் அழைக்கப்படுகிறது. இப்பதிவில் மனித முகம் கொண்ட பூச்சியின் வாழ்க்கை வரலாறு, நடத்தை மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

Man Faced Stink Bug என அழைக்கப்படும் மனித முகப் பூச்சி 1.5 - 2 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியதாகும். இது பல்வேறு வண்ணங்களில் காணப்படுகிறது. பொதுவாக சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். அதன் முதுகில் இரண்டு பெரிய கருப்பு புள்ளிகள் மற்றும் முன் இறக்கைகளில் இரண்டு சிறிய கருப்பு புள்ளிகள் இருக்கும். இதன் தலையில் மனித முகத்தைப் போன்ற அமைப்பு தெளிவாக தெரியும். இதில் கண்கள் மூக்கு மற்றும் வாய் போன்ற மனித முக அமைப்பு அப்படியே தெரியும். 

பொதுவாகவே இந்த பூச்சிகள் தன் முட்டைகளை இலையின் அடிப்பகுதியில் அல்லது தண்டுகளில் இடுகின்றன. முட்டைகள் பொரிந்து ஐந்து புழு நிலைகளைக் கடந்து இறுதியில் ஒரு முழுமையான பூச்சியாக மாறுகிறது. இவை பெரும்பாலும் பழங்கள் விதைகள் மற்றும் இலைகளை உண்ணுகின்றன. தாவரங்களிலிருந்து சாற்றினை உறிஞ்சுவதற்கு தங்களின் கூர்மையான துளையிடும் வாய்களைப் பயன்படுத்துகின்றன. 

இந்த பூச்சிகள் தங்கள் பின்புறத்தில் உள்ள கருப்பு புள்ளிகளை ஒரு தற்காப்பு கருவியாகப் பயன்படுத்துகின்றன. ஏதேனும் அச்சுறுத்தலை சந்தித்தால் அவை தங்கள் தலையை கீழே குனிந்து தங்களது முகம் போன்ற அமைப்புகளை வெளிப்படுத்தி வேட்டையாடும் விலங்குகளை பயமுறுத்தி தப்பிக்க முயற்சிக்கும். மேலும், இவற்றின் உடலில் இருந்து சுரக்கும் ஒருவித ரசாயனம் மூலமாக, வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து பாதுகாப்புடன் இருக்கின்றன. ஏனெனில் அந்த ரசாயனம் துர்நாற்றம் வீசக்கூடியது. 

இதையும் படியுங்கள்:
Acanthaspis Petax: முதுகில் சவங்களை சுமக்கும் கொலைகாரப் பூச்சி! 
Man Faced Stink Bug

மனித முக பூச்சிகள் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பூக்களுக்குச் சென்று மகரந்தத்தை சேகரித்து மற்ற பூக்களுக்கு கொண்டு செல்கின்றன. மேலும் தாவரங்களில் காணப்படும் மற்ற பூச்சிகளின் முட்டைகளை உணவாக உட்கொண்டு, தாவரங்களை பூச்சி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கிறது. 

இந்தியாவில் காணப்படும் பூச்சி இனங்களில் இந்த மனித முக பூச்சி முற்றிலும் தனித்துவமான மற்றும் சுவாரசியமான பூச்சி ஆகும். இதன் தோற்றம், நடத்தை மற்றும் சூழலியல் முக்கியத்துவத்தை பற்றி நாம் இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த முறை இந்த பூச்சியை நீங்கள் எங்காவது கண்டால், அதை அப்படியே தலைகீழாக திருப்பிப் பாருங்கள், மனித முகம் உங்கள் கண்களுக்குத் தெரியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com