ஏன் அரச மரத்தை சுற்ற வேண்டும்? - ஆன்மீகம் சொல்லும் அறிவியலும் அதிசயங்களும்!

Medicinal Benefits
Medicinal Benefits
Published on

Medicinal Benefits:

க்களின் தலைவரை மற்றும் அனைத்திலும் சிறந்தவரை தான் நாம் அரசன் என்றழைக்கிறோம். விலங்குகளின் அரசன் என்று சிங்கத்தை கூறுகிறோம். அதைப்போல பழங்களிலும் மாம்பழத்தை பழங்களின் ராஜா என்று கூறுகிறோம். இதே மாதிரி மரங்களின் அரசன் யார் தெரியுமா??

ஆம்! மரங்களின் அரசன் அரச மரம்தான்.

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டு கொண்டிருக்கிறார்கள். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆலம், அரசு என பல மரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. இதில் அனைத்து மரங்களையும் விட அரச மரத்திற்கு தன் சிறப்பு அதிகம். அதனால்தான் அதை மரங்களின் அரசன் என்றழைக்கிறார்கள். அரச மரத்தின் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாமா..

ராஜவிருட்சம்:

அரச மரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் இருப்பதாகவும் அவர்கள் அந்த மரத்திலிருந்து நமக்கு அருள் புரிவதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இந்த காரணத்தினால் தான் அரச மரம் ராஜ விருட்சம் என்றும் அழைக்கப்படுகிறது. 'மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்" என்று கீதையில் கண்ணபிரானும் கூறியிருக்கிறார்.

புராண காலத்திலிருந்தே அரசமரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கிறார்கள். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கான சான்றுகளும் இருக்கின்றன.

அரச மரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாக திகழ்கிறது. புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதை நாம் எல்லோருமே அறிவோம். அந்த போதிமரம் என்பது இந்த அரச மரம்தான். நீண்டு நெடிய மரமாக, அழகான இலைகளோடு பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்களும் உண்டு.

விஞ்ஞான ரீதியான உண்மை:

அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை நெடுங்காலமாகவே நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமாகதான் “அரசனை நம்பி புருஷனை கைவிட்டாள்" என்ற பழமொழி கூட வழக்கத்தில் வந்தது

பெண்கள் கற்பமுற பெரும்பாலும் தடையாக இருப்பது கர்ப்பப் பையின் வாய் சிறுத்து இருப்பது அல்லது மூடி இருப்பதுதான். இதற்கு புருஷ மரத்தை அதிகாலை ஒரு மாதம் சுற்றி வந்தால் சரி ஆகிவிடும் என்று முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். புருஷ மரம் அரசமரத்தைவிட அதிக பிராண வாயுவை வெளியிட கூடியது. ஆனால் புருஷ மரம் என்பது கிடைப்பது மிகவும் அரிது.

ஆகவே புருஷ மரத்திற்கு பதிலாக அரச மரத்தை சுற்றி வரலாம் என்று கூறவே அனைவரும் புருஷ மரத்தை மறந்து அரச மரத்தையே சுற்ற ஆரம்பித்தார்கள். அரச மரம் பொதுவாக எல்லா கோவில்களும் இருக்கும். புருஷ மரம் கிடைக்காத காரணத்தால் அரச மரத்தை சுறற ஆரம்பித்ததைதான் முன்னோர்கள் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை என்று கூறினார்கள்.

அறிவியல் பூர்வமாகவும் இந்த பெண்களுக்கான பிரச்னை தீர்வு அரச மரத்தில் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அரச மரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கடலின் தூய்மைப் பணியாளர்கள்: நீங்கள் அறியாத துறவி நண்டுகளின் ரகசியங்கள்!
Medicinal Benefits

பிராணவாயு வெளியேற்றம்:

நன்கு வளர்ந்த ஒரு அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள் வாங்கி (carbon – di – oxide) 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து விடுவதால் காலை நேரங்களில் இம் மரத்தை சுற்றி வரும்போது நம்முடைய நாளமில்லா சுரப்பிகளில் (endo crine glands) செயல்பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகிறார்கள்.

அரச மரத்தை தேடி போகவேண்டும் என்ற அவசியமே நமக்கு இல்லை, எல்லா ஊரிலுமே இருக்கும். முடிந்த வரை அதை சுற்றினால் எல்லா வயதினருக்குமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com