

இயற்கையின் அதிசயமாக விளங்கும் மெகாபோட் பறவைகள், தங்கள் உடலால் அல்லாமல் மணல், இலைகள், சிதைந்த தாவரப் பொருட்கள் கொண்டு தனித்துவமான அடைகாக்கும் கருவியை உருவாக்கி குஞ்சுகளை பாதுகாக்கும் வித்தியாசமான பழக்கத்தால் கவனம் ஈர்க்கின்றன. ஆண் பறவைகள் வெப்பத்தை கண்காணித்து குஞ்சுகளை காக்க, பெண் பறவைகள் முட்டை இடுவதில் மட்டும் ஈடுபடுவது இந்த இனத்தின் சிறப்பு.
இயற்கை நமக்கு பல அதிசயமான விவரங்களைத் தருகிறது. அதிலும் ஒருசில பறவைகளின் வழக்கங்கள் ஆச்சர்யத்தைத் தருகின்றன. அப்படி ஒரு ஆச்சர்யமான விஷயத்தை மெகாபோட் பறவை (Megapode) தருகிறது.
பொதுவாக எல்லா பறவைகளுக்கும் பல வாரங்கள் தாங்கள் இடும் முட்டைகளை மிக ஜாக்கிரதையாக அடைகாக்கும் பழக்கம் உண்டு. ஆனால் மெகாபோட் பறவைகள் (Megapode) இதில் வித்தியாசமாக செயல்படுகின்றன.
தங்கள் குஞ்சுகளை தங்கள் உடலால் அடைகாப்பதை தவிர்த்து ஒரு தலைசிறந்த சிவில் பொறியாளர் போன்று இவை அடைகாக்கும் கருவியை மணல் மற்றும் சில பொருட்களைக் கொண்டு தாமாகவே தயாரிக்கின்றன. அதில் குஞ்சுகளை வைத்துவிட்டுப் போய்விடுகின்றன.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் பல மில்லியன் ஆண்டுகளாக இந்த பழக்கத்தைப் பின்பற்றிவருகின்றன. இந்த வகையில் மெகாபோட் பறவைகள் குஞ்சுகளை வித்தியாசமாக அடைகாக்கிறது. குஞ்சுகளுக்கு வேண்டிய வெப்பத்தை இவை தயாரிக்கும் அடைகாக்கும் கருவி தக்கவைக்கப்படுகிறது. இதனால் குஞ்சுகளைப் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கும்.
ஆராய்ச்சிகளின் மூலம் மெகாபோட் பறவைகள் சிறியவையாக இருக்கும். இதில் சுமார் 22 வகைகள் உள்ளன. அவை பப்புந்யூகினியா, ஆஸ்திரேலியா, ஃபிலிப்பைன்ஸ் மற்றும் நிகோபார் தீவுகளில் காணப்படுகின்றன.
மெகாபோட் (Megapode) என்ற கிரேக்க வார்த்தைக்கு பெரிய கால்கள் என்று பெயர். இவற்றிற்கு கால்கள் பெரியதாக இருக்கும்.
மெகாபோட் பறவைகள் (Megapode) அடைகாக்கும் கருவியை எப்படி உருவாக்குகின்றன?
இந்த பறவை இனம் மற்ற பறவைகளை போன்று தங்கள் உடல் மூலம் குஞ்சுகளை அடைகாக்காமல் வெப்பமான சூழல் மற்றும் சூரிய வெளிச்சத்தால் சூடான மணல்கள் போன்ற மிக வறண்ட இடங்களையே தேர்ந்தெடுத்து, இந்த வறண்ட இடங்களில் வெப்பமான மணல் மற்றும் சிதைந்த ஆர்கானிக் பொருட்கள் இவற்றில் அதிக வெப்பம் உள்ளதால் இவற்றையே நம்பி அடைகாக்கின்றன.
ஒவ்வொரு வகை மெகாபோட் பறவைகள் (Megapode) வெவ்வேறு பொருட்களை அடைகாக்கும் கருவிக்காக பயன்படுத்துவதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. மணல், தாவரப் பொருட்கள், போன்றவற்றையே பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
ஆண் பறவைகள் அடைகாக்கும் கருவியில் சரியான வெப்பம் உள்ளதா என்பதை அடிக்கடி கண்காணிக்குமாம். இதில் பெரும்பாலும் ஆண்பறவைகள் தான் அடைகாக்கும் கருவி தயாரிப்பு வேலையில் ஈடுபடுகின்றன. இலைகள் குச்சிகள் மணல் மற்றும் சிதைந்த தாவர பொருட்களை சேகரித்து குஞ்சுகளுக்கு தேவையான வெப்பம் கிடைக்கும் அளவிற்கு அவற்றை தயாரிக்கின்றன.
மெகாபோட் பறவைகள் (Megapode) இனத்தில் ஒரு பெண் பறவை சுமார் 35 முட்டைகள் இட்டாலும் அத்தோடு அதன் வேலை முடிந்து விடுகிறது. ஆண் இனம் மட்டுமே குஞ்சுகளை காக்கிறது. இறக்கைகள் முளைத்து சுதந்திரமாக பறக்கின்றன. தங்களைத் தாங்களே கவனித்துக் கெள்கின்றன. பெரும்பாலும் விதைகள், நத்தைகள், தாவரப் பொருட்கள், மற்றும் பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன.
அடைகாக்கப்படும்போது வித்தியாசமான முறையாக இருப்பதாலும் குஞ்சுகளை காப்பாற்றுவது கடினமாக இருப்பதாலும் இந்த பறவையின் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது வேதனைக்குரியது.
மேலும் இந்த பறவையின் முட்டைகளை பல மக்கள் ஆதாரமாக உண்ணுவதால் இதற்கு அழிவு ஏற்பட்டுள்ளது.
மற்ற பறவைகளை போன்று இயற்கையான அடைகாக்கும் முறை மெகாபோட் இனத்தில் இல்லாததால் பெரும்பாலான குஞ்சுகள் அழியும் ஆபத்து ஏற்படுகிறது. இதன்மூலம் இந்த பறவை இனம் குறைந்து வருவது வருத்தத்திற்குரியது.
இயற்கையின் விசித்திரமான படைப்புகளை அறிந்துகொள்வதன் மூலம் விலங்கு உலகத்தைப் பற்றிய உங்களது புரிதலை மேம்படுத்தி, அரிய உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள முடியும்.