மன்னார்வளைகுடா ஆழ்கடலில் அதிசய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Amazing creatures
Amazing creatures
Published on

ந்தியாவின் மிக முக்கிய கடல்வாழ் பல்லுயிர் பெருக்க மற்றும் தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியாக இருக்கும் மன்னார்வளைகுடா கடலில் புதிதாக 62 வகை அரிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி வரை மட்டுமின்றி, இலங்கை வரை 10,500 சதுர கி.மீ. வரை பரந்து விரிந்துள்ள மன்னார்வளைகுடா பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகளை உள்ளடக்கியது.

இப்பகுதி கடல்வாழ் உயிரினங்களின் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான முள்தோலிகள், சங்கு, சிப்பிகள், கணுக்காலிகள், திமிங்கலம், கண்ணைக் கவரும் பல வண்ண மீன்கள், பாலூட்டி வகைகளான கடல் பசுக்கள், கடல் அட்டைகள், கடல் பாம்புகள், கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள், அரிய வகை பவளப்பாறைகள் என பதிவு செய்யப்பட்ட 4223 கடல்வாழ் உயிரினங்கள் வாழும் அதிசயப் பகுதியாகும்.

மன்னார்வளைகுடா கடலில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை முடிவு செய்து அனுமதி வழங்கியதன் பேரில் ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 2017 மே முதல் தற்போது வரை பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் கணக்கெடுப்புகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதி 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதோடு 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 11 கடல் பஞ்சு இனங்கள், 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 3 மீன் இனங்கள், 17 மில்லியன் பவளப்பாறை இனங்கள், 16 சங்கு இனங்கள் என 62 புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதோடு 50க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத புதிய உயிரினங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
குதிரைப் பந்தயத்தில் இத்தனை வகைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
Amazing creatures

2003 மற்றும் 2005ல்  நடத்தப்பட்ட ஆய்வு தகவல்களை ஒப்பிட்டு பார்க்கும்போது மன்னார்வளைகுடா கடல்வாழ் உயிரியல் களத்தில் பருவநிலை மாற்றம் தாக்கத்தின் காரணமாக புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  தெரிய வந்துள்ளது.

கடலுக்கடியில் ஆய்வு செய்வதற்கு ஸ்கூபா டைவிங் வீரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். கடலில் அதிகக் காற்று மற்றும் மழைக்காலங்களில் மட்டுமல்லாமல், கடலுக்கு அடியில் நடத்தப்படும் ஆய்விற்கு இந்த ஸ்கூபா டைவிங் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com