நம்முடைய வயல்வெளிகளில் பயிர்களை காப்பாற்ற உதவும் சிறந்த 8 சிறிய பாலூட்டிகளை பற்றி பார்க்கலாமா...
சிறிய பாலூட்டிகள் என்பது பொதுவாக சிறிய உடல் அளவுடைய பாலூட்டிகளைக் குறிக்கும். இவை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவை அல்ல, மாறாக பல்வேறு இனங்களை உள்ளடக்கியவை. இவை பொதுவாக எலிகள், அணில்கள் , வௌவால்கள், முள்ளெலிகள் போன்ற கொறித்துண்ணிகளாகும்.
இந்த சிறிய பாலூட்டிகள் தான் பண்ணைகளிலும் தோட்டங்களிலும் உள்ள புழுக்களையும் பூச்சிகளையும் உண்டு நமது பயிரை பாதுகாக்கின்றன. ஆனால் பயிர்களின் வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் இந்த சிறிய பாலூட்டிகளின் சிறப்பை பற்றி நமக்கு அதிகமாக தெரிவதில்லை. சிறந்த 8 சிறிய பாலூட்டிகளை பற்றி இப் பதிவில் பார்க்கலாம்..
தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் விலங்குகளாகும். முள்ளம்பன்றிகள் பூச்சிகள் மற்றும் நத்தைகளை வேட்டையாடுகின்றன. இராசயனங்களின் உதவி இல்லாமல் பயிர்களில் பூச்சி வருவதை இவை தடுக்கின்றன.
இது பொதுவாக தென்னை மரத்திலோ அல்லது பனை மரத்திலோ தான் அதிகமாக காணப்படும். இதன் உடம்பில் வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும்.
இவை தோட்டத்தில் உள்ள புழு பூச்சிளை உண்ணும். மேலும் மரத்தில் உள்ள பழங்களை இங்கும் அங்குமாக ஓடி ஓடி தின்பதால் கொட்டைகள் பல இடங்களில் சிதறி புதிய மரகன்றுகள் உருவாகின்றன.
இந்திய சாம்பல் நிற கீரி, கொடிய நச்சுள்ள, நாகப்பாம்புடன் சண்டையிட்டு கொல்லும் திறன் உடையது. கீரியின் தடித்த தோலும், அதிவேகமாக இயங்கும் ஆற்றலும் பாம்பை எதிர்க்க உதவுகின்றன. கீரியின் உடலில் உள்ள ‘அசிட்டைல்கோலின்' என்ற வேதிப்பொருள் பாம்பின் நச்சை எதிர்க்கும் திறனைக் கொடுக்கிறது.
இவை பூச்சி, பல்லி, மற்றும் சிறிய பறவைகளின் முட்டைகளையும் உண்ணும். இறந்த விலங்கின் இறைச்சியையும் கூட உண்ணும். சில இனங்கள் தனித்தே உணவு தேடி வாழும். சில, குழுவாக இணைந்து வாழ்ந்து, இரையைப் பகிர்ந்து கொள்ளும்.
இந்த வௌவால்கள் பூக்களில் மகரந்தச் சேர்க்கை செய்து விதைகளைப் பரப்பி, காடுகள் மற்றும் பழத்தோட்டங்களுக்கு நன்மை பயக்கின்றன.
இந்த சிறிய பாலூட்டிகள் தினமும் அதிக அளவு பூச்சிகளை உட்கொள்கின்றன; பூச்சி கட்டுப்பாட்டிற்கு பெரிதும் பங்களிக்கின்றன.
இவைகள் தங்களுடைய கூர்மையான மூக்கினால் சுரங்கப்பாதைகளை தோண்டுவதன் மூலமாக மண்ணை காற்றோட்டமாக்குகின்றன. நீர் ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்தை மேம்படுத்துகின்றன. இது ஆரோக்கியமான தாவர வளர்ச்சிக்கும் விவசாய நில வளத்திற்கும் அவசியம்.
இந்த உண்ணிகள் இரவில் பழங்களை சாப்பிட்டு விதைகளைப் பரப்பி, காடுகளின் விரிவாக்கத்திற்கும் மற்றும் இனப் பெருக்கத்திற்கும் உதவுகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் நீலகிரி மார்டன்கள் புழு பூச்சி மற்றும் சிறிய விலங்குகளை வேட்டையாடி இயற்கை சூழ்நிலையை சரி சமமாக வைக்க உதவுகின்றன.