
பறவைகள் என்றாலே எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய உயிரினங்களாகும். அவை, அவற்றின் அழகு, பாடும் மற்றும் பறக்கும் திறனுக்காகப் போற்றப்படுகின்றன. சில பறவைகள் அவற்றின் பிரகாசமான மற்றும் வண்ணமயமான இறகுகளுக்காக பெயர் பெற்று இருக்கின்றன. இந்தத் துடிப்பான வண்ணங்கள் நம் கண்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், பறவைகள் தங்களுடைய துணையை ஈர்ப்பதற்காகவும் காடுகளில் அவற்றின் தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காகவும் உதவுகின்றன. இந்த வண்ணமயமான பறவைகளில் உலகிலேயே மிக அழகாக இருக்கும் 7 வண்ணப் பறவைகளைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
லிலாக்-ப்ரெஸ்டட் ரோலர் (Lilac-Breasted Roller): உலகின் மிகவும் வண்ணமயமான பறவை என்று அழைக்கப்படும் லிலாக்-ப்ரெஸ்டட் ரோலர் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இதன் மார்பு பகுதி இளஞ்சிவப்பு நிறத்திலும், பிரகாசமான நீலம் மற்றும் பச்சை நிறத்தில் இறக்கைகளும் மற்றும் நீல நிற உடலையும் கொண்டுள்ளன. இந்தப் பறவை அதன் வான்வழி காட்சிகளுக்கும் மற்றும் காதலில் இணையும்போது வானத்தில் உருண்டு குதிக்கும் சிறப்பான தன்மைக்கும் பிரபலமானது.
ரெயின்போ லோரிகீட் (Rainbow Lorikeet): ரெயின்போ லோரிகீட் என்பவை ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட கிளிகளாகும். தன் பெயருக்கு ஏற்றவாறு, இவை பல வண்ணங்களில் இறகுகளைக் கொண்டுள்ளன. அடர் நீல நிற தலை, பச்சை நிற முதுகு, ஆரஞ்சு நிற மார்பு மற்றும் சிவப்பு நிற அலகு. இவை பெரும்பாலும் பூக்களிலிருந்து தேனை உண்ணும்போது சத்தமாகக் குழுக்களாகப் பறக்கும்.
மாண்டரின் வாத்து (Mandarin Duck): மாண்டரின் வாத்து உலகின் மிகவும் கவர்ச்சிகரமான வாத்துகளில் ஒன்றாகும். குறிப்பாக, ஆண் வாத்து மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். அதன் இறகுகளின் பின்புறத்தில் ஆரஞ்சு நிற பாய்மரங்களும் சிவப்பு நிற அலகு மற்றும் பச்சை, ஊதா மற்றும் வெள்ளை நிற shadesகளும் உள்ளன. சீன பாரம்பரியத்தில், இந்த வாத்து காதல் மற்றும் விசுவாசத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது.
ரெஸ்ப்ளென்டன்ட் குவெட்சல் (Resplendent Quetzal): ரெஸ்ப்ளென்டன்ட் குவெட்சல் மத்திய அமெரிக்காவின் மூடுபனி காடுகளில் வாழ்கிறது. இந்தப் பறவை மரகத-பச்சை உடலையும், பிரகாசமான சிவப்பு நிற மார்பையும் மற்றும் ஈர்க்கக்கூடிய முகட்டையும் கொண்டுள்ளது. ஆண் பறவையின் நீண்ட வால் இறகுகள் ஒரு மீட்டர் நீளம் வரை செல்லலாம். பண்டைய மாயன் மற்றும் அஸ்டெக் கலாசாரங்களில் இந்தப் பறவையானது புனிதமாகவும் சுதந்திரத்தின் சின்னமாகவும் கருதப்பட்டது.
பெயிண்டட் பண்டிங் (Painted Bunting): ‘nonpareil’ என்ற செல்லப்பெயர் கொண்ட, வர்ணம் பூசப்பட்ட பண்டிங், வட அமெரிக்காவில் உள்ள மிகவும் அற்புதமான சிறிய பறவைகளில் ஒன்றாகும். ஆண் பறவைகளின் இறகுகளில் நீல நிற தலை, பச்சை முதுகு மற்றும் சிவப்பு வயிறுடன் ஒரு கலைஞரின் ஓவியம் போல இருக்கும். அதன் தனித்துவமான வண்ணங்களின் கலவையால் அவை தனித்துவத்தோடு தோன்றுகின்றன.
ஸ்கார்லெட் மக்காவ் (Scarlet Macaw): ஸ்கார்லெட் மக்காவ் என்பது மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படும் ஒரு பெரிய கிளி. இதன் இறகுகள் பெரும்பாலும் பிரகாசமான சிவப்பு நிறத்திலும், மஞ்சள் மற்றும் நீல நிற இறக்கைகளுடனும் இருக்கும். இந்தப் பறவைகள் வெப்ப மண்டலத்தின் சின்னமாகும், மேலும், அதன் வண்ணமயமான உடல் சூரிய ஒளியில் காட்டு விதானத்துடன் கலக்க உதவுகிறது.
ஸ்பாங்கிள்டு பேனர் (Spangled Banner): ஸ்பாங்கிள்டு பேனர் அமேசான் மழைக்காடுகளில் காணப்படும் ஒரு அரிய வகை அழகு பறவை ஆகும். ஆண் பறவைக்கு நீல நிற இறகுகள் மற்றும் பளபளப்பான மெஜந்தா தொண்டைப் பகுதி உள்ளது. பல வண்ணமயமான பறவைகளைப் போலல்லாமல், இவை அமைதியாகவும், பெரும்பாலும் மரங்களில் உயரமாக அமர்ந்து கொண்டு, காட்டில் ஒரு ரத்தினத்தை போல பளபளக்கின்றன.