சம்பா நடவுப் பணியில் வெளி மாநில விவசாயிகள்!

சம்பா நடவுப் பணியில் வெளி மாநில விவசாயிகள்!
Published on

மிழ்நாட்டில் சம்பா நடவு செய்யும் பணியில் வெளி மாநில விவசாயிகள் அதிகம் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நகரமய வளர்ச்சியின் காரணமாக கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பான்மையானோர் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கி விட்டனர். விவசாயத் தொழிலுக்கு மாற்றாக பிற தொழில்களை நோக்கி செல்லவும் தொடங்கி இருக்கின்றனர். மேலும், விவசாயத் துறையில் காணப்படும் பல்வேறு இடர்பாடுகள் காரணமாக விவசாயத் தொழிலை செய்வோர் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு விவசாயத்தைக் கற்றுத்தர கூட முனைப்பு காட்டுவதில்லை.

இந்த நிலையில், தற்போது காவிரியில் நீர் வருவது உறுதிப்படுத்தாத ஒன்றாக மாறியிருக்கும் வேளையில், போர்வெல்கள் மூலம் வரும் தண்ணீரைப் பயன்படுத்தியும், சொட்டுநீர் பாசனத்தின் மூலமாகவும் சம்பா பயிரை நடவு செய்ய விவசாயிகள் தற்போது தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் பெருமளவில் குறைந்து இருப்பதாலும், இருக்கக்கூடிய விவசாயத் தொழிலாளர்களும் கூடுதல் சம்பளம் கேட்பதால் விளைநிலங்களை வைத்திருப்பவர்கள் விவசாயப் பணிகளுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை நியமிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா பயிர் நடவு பணி தொடங்கி இருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை விவசாயப் பணிக்கு அமர்த்தி வருகின்றனர்.

மேலும், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டு தொழிலாளர்களை விட குறைந்த அளவு சம்பளம் வழங்கப்படுவதால் ஏக்கருக்கு 2000 ரூபாய் மிச்சமாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம், வட மாநில தொழிலாளர்கள் விவசாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும், அவர்களுக்கு விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் போதிய அனுபவம் இல்லாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு விவசாயி இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சியையும் விவசாயிகள் அளித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com