
சமீபத்தில் கடற்கரையில் ரிப்பன் போன்ற தோற்றமும், சிவப்பு கொண்டை போன்ற அமைப்பைத் தலையில் உள்ள Oarfish என்ற இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டாஸ்மேனியாவிலும், தமிழ்நாட்டு கடற் கரையிலும் காணப்பட்டது. டாஸ்மேனியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நீண்ட பாம்பு போன்ற தோற்றம் உடைய இந்த மீன் வெள்ளி நிறத்தில் சுமார் 30 அடி நீளம் உள்ளது. இதன் வருகையினால் கலவரம் ஏற்பட்டுள்ளது இதே போன்ற மீன் தமிழக கடற்பகுதியிலும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதன் விஞ்ஞானப் பெயர் Regalecus Glesne. இது கடலுக்கு 200லிருந்து 1000 அடி ஆழத்தில் காணப்படும். மிக அபூர்வமாக மேற்பரப்பிற்கு வரும் இதன் வருகைக்கு கலவரம் ஏற்படக்காரணம் பூகம்பம் மற்றும் சுனாமி காலங்களுக்கு முன்னர் இந்த வகை மீன் காணப்படுமாம். ஜப்பான் ஆராய்ச்சியின் படி பூகம்பகளுக்கு முன் இது காணப்பட்டதாம் இதனால் இதன் வரவு ஆபத்தை முன்கூட்டியே வெளிப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கடலில் ஏதாவது மாற்றமோ அல்லது பூகம்பமோ இதன் வருகை உணர்த்துவதாக நினைக்கப்படுகிறது.
ஆழ்கடல் பகுதியிலிருந்து டாஸ்மேனியா மற்றும் தமிழக கடற்கரை பகுதியிலும் இது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டு தீவிர ஆய்வும் நடைபெற்று வருகிறது. இந்த வகைமீன் கண்ணில் பட்டதால் ஏதாவது ஆபத்து விளையுமோ என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை படுகிறார்கள்.