
பழைய பேட்டரிகளை மீண்டும் பயன்படுத்தி மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்று இந்திய அறிவியல் கழகம் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உடைய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இயற்கை சூழலை மாசடையாமல் பாதுகாக்கும் பொருட்டு அரசும் மின்சார வாகன உற்பத்திக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அறிவியல் கழகம் மின் கழிவுகளை குறைக்கவும், மின்சார பேட்டரியினுடைய ஆயுளை கூட்டுவதற்குமான தீவிர ஆய்வை முன்னெடுத்து வருகிறது.
தற்போது இயற்கைக்கு மிகப்பெரிய அளவில் மனிதன் பாதிப்பை ஏற்படுத்தி விட்டான். அதை தடுப்பதற்கான மற்றும் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்று தான் மின்சார வாகன தேவை அதிகரிப்பு. அதே நேரம் பல்வேறு வகையான பேட்டரிகளின் உடைய ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே அவை குப்பையாக கருதப்பட்டு வீசப்படுகிறது. இவற்றை தடுக்க பேட்டரிகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மேலும் அவற்றை மீண்டும் உயிர் பெற செய்ய வேண்டும். மறுசுழற்சி செய்வதை காட்டிலும் மீண்டும் பழைய பேட்டரிகளுக்கு உயிர் கொடுத்து பயன்படுத்துவது எளியது, செலவும் குறைவு மேலும் மாசுகளையும் குறைக்கும். இது பெருமளவிலான மின்சார குப்பையை குறைப்பதற்கான வழி.
தற்போது உலக நாடுகள் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று மின்சார குப்பைகள். இவற்றை தடுக்க பேட்டரிகளை மீண்டும் உயிர் கொடுத்து பயன்படுத்தும் நடைமுறையை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான ஆலைகளை இந்தியாவில் அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய அறிவியல் கழகம் பரிந்துரை செய்துள்ளது.