Olive Ridley: சென்னையை நோக்கி வரும் ஆமைகள் பற்றிய சுவாரசிய தகவல்கள்! 

Olive Ridley sea Turtles.
Olive Ridley sea Turtles.
Published on

Olive Ridley கடல் ஆமை, அறிவியல் ரீதியாக Lepidochelys Olivacea என்று அழைக்கப்படும் இந்த சிறிய ரக ஆமைகள், உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்களை பெரிதளவில் கவர்ந்த உயிரினமாகும். வருடத்திற்கு ஒருமுறை ஆயிரக்கணக்கான பெண் ஆமைகள் தங்கள் முட்டைகளை இடுவதற்காக குறிப்பிட்ட கடற்கரைகளில் கூடுகின்றன. 

இந்த நிகழ்வை Arribada என அழைக்கிறார்கள். இந்தியாவின் பரபரப்பான கடற்கரை நகரமான சென்னை, இந்த அழிந்து வரும் ஆமைகள் முட்டையிடும் இடமாக மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சுமார் 10,000க்கும் அதிகமான Olive Ridley ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இந்த அரிய நிகழ்வைக் காண பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 

Olive Ridley ஆமைகளின் வாழ்க்கை சுழற்சி: சென்னைக்கு இந்த ஆமைகள் வருவதற்கான காரணங்களை அறிவதற்கு முன், இவற்றின் வாழ்க்கை சுழற்சியைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த அற்புதமான உயிரினங்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை திறந்த கடலில் செலவிடுகின்றன.‌ ஜெல்லி மீன்கள், நத்தைகள் மற்றும் பிற முதுகெலும்பில்லாத உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன. பெண் ஆமைகள் சுமார் 15 வயதில் பாலியல் முதிர்ச்சியை அடைந்து முட்டையிடுவதற்காக தாங்கள் பிறந்த கடற்கரைகளுக்கு திரும்புகின்றன. இந்த நடத்தை தான் அவற்றை சென்னை கடற்கரையை நோக்கி வர வைக்கிறது. 

சுற்றுச்சூழல் காரணிகள்: Olive Ridley கடல் ஆமைகள் சென்னை கடற்கரையை நோக்கி வருவதற்கு சென்னையின் சுற்றுச்சூழல் நிலைமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நகரம் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளதால், ஆமை முட்டைகள் பொரிப்பதற்குத் தேவையான வெப்ப மண்டல காலநிலையை வழங்குகிறது. சென்னையின் மணற்பாங்கான கடற்கரைகள் முட்டைகள் வெற்றிகரமாக அடைகாக்கப்படுவதற்கு சரியான வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் உணவை வழங்குவதால், ஆமைகள் முட்டையிடுவதற்கு  சரியான தேர்வாக உள்ளன. 

சேகரிக்கப்படும் முட்டைகள்: ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் இந்த ஆமைகள் இருளின் மறைவில் கடற்கரையில் முட்டைகளை இடுகின்றன. முட்டையிட்ட அடுத்த மூன்று மாதங்களில் அவை பொரிக்கத் தொடங்கிவிடும். இந்த காலகட்டத்தில் பொதுத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், கடற்கரையில் Turtle Walk ஏற்பாடு செய்யப்பட்டு, முட்டைகளை கவனமாக சேகரித்து கடற்கரைகளில் அமைக்கப்படும் குஞ்சு பொரிப்பகங்களில் வைப்பார்கள். பின்னர் ஆமைக்குஞ்சுகள் பொரித்ததும் அவற்றை பாதுகாப்பாக கடலில் விட்டுவிடுவார்கள். இப்படிதான் கடந்த ஒன்றாம் தேதி பெசன்ட் நகர் கடற்கரையில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஆலிவுட் ரிட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. 

இதையும் படியுங்கள்:
இந்த 5 Dark Psychology தந்திரங்களில் இருந்து ஜாக்கிரதையாக இருங்கள்! 
Olive Ridley sea Turtles.

பாதுகாப்பு: சென்னையை நோக்கி வரும் இந்த ஆமைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த பல பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு சென்னை கடற்கரை துப்புரவு இயக்கங்கள், கடற்கரைகளில் இருந்து குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. இதன் மூலமாக ஆமைகள் மற்றும் அவற்றின் குஞ்சுகளுக்கு ஏற்படும் அபாயங்கள் குறைகின்றன. கடல் ஆமைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com