ஆக்சிஜன் இல்லாமலும் இந்த 6 உயிரினங்களால் வாழ முடியும். பூமியில் இருக்கும் ஏலியன்கள் இவைதான்!

6 Organisms That Do Not Breathe Oxygen
6 Organisms That Do Not Breathe Oxygen
Published on

ம்மால் மூச்சுவிடாமல் ஒரு நிமிடம் கூட உயிரோடு இருக்க முடியாது என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான். பூமியில் இருக்கும் அனைத்து விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயு மிக மிக அவசியம் என பள்ளிக்கூடங்களில் படித்திருப்போம். ஆனால் இயற்கையின் படைப்பில் எப்போதுமே சில அதிரடியான ஆச்சரியங்கள் ஒளிந்திருக்கும். 

ஆக்சிஜன் என்ற ஒன்று இல்லாமலேயே ரொம்ப ஜாலியாகவும் கெத்தாகவும் உயிர்வாழும் சில உயிரினங்களும் இந்த பூமியில் வசிக்கின்றன. வேற்று கிரக வாசிகளுக்கு இணையாக அறிவியல் உலகையே பிரம்மிக்க வைத்த அப்படிப்பட்ட 6 விசித்திரமான உயிரினங்களை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஆக்சிஜனை சுவாசிக்காத 6 உயிரினங்கள்!

1. ஹென்னெகுயா சால்மினிகோலா (Henneguya salminicola): சால்மன் மீன்களின் தசைப்பகுதிகளில் வாழும் ஒரு சின்ன ஒட்டுண்ணிதான் இது. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த உயிரினத்தின் உடலில் மைட்டோகாண்ட்ரியா என்ற உறுப்பே கிடையாது. அதாவது இது நினைத்தாலும் ஆக்சிஜனை சுவாசிக்க முடியாது. தான் தஞ்சம் அடைந்த மீனின் உடலில் இருந்து தனக்கு தேவையான எனர்ஜியை அப்படியே திருடி இது எந்த ஒரு கவலையும் இல்லாமல் உயிர்வாழ்கிறது.

2. லாரிசிஃபெரா (Loricifera): மத்திய தரைக்கடலின் மிக ஆழமான ஒரு இருண்ட பகுதியில் இந்த உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். அந்த இடத்தில் கொஞ்சம்கூட ஆக்சிஜன் கிடையாது, மாறாக அதிகப்படியான உப்பு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு என்ற விஷவாயு மட்டுமே இருக்கும். இந்த கொடூரமான சூழ்நிலையிலும் லாரிசிஃபெரா ரொம்பவே கூலாக உயிர்வாழ்கிறது.

3. நீர் கரடிகள் (Tardigrades): டார்டிகிரேடு என்று அழைக்கப்படும் இந்த மைக்ரோஸ்கோபிக் உயிரினங்களை யாராலும் அத்தனை சுலபமாக அழிக்கவே முடியாது. ஆக்சிஜன் கொஞ்சமும் இல்லாத விண்வெளியில் தூக்கிப் போட்டாலும் இது சாகாது. தங்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் உடனே தங்களின் உடல் இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டு பல வருடங்களுக்கு அப்படியே ஒரு கோமா நிலைக்கு சென்றுவிடும்.

4. மெத்தனோஜென்கள் (Methanogens): இவை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான மிக பழமையான நுண்ணுயிரிகள் ஆகும். இவற்றுக்கு ஆக்சிஜன் என்பது ஒரு கொடிய விஷம் ஆகும். சேறு நிறைந்த சதுப்பு நிலங்கள் மற்றும் மாடுகளின் வயிற்றில் இவை வாழும். காற்றில் இருக்கும் கரியமில வாயுவை மட்டும் சுவாசித்துவிட்டு மீத்தேன் வாயுவை இவை இயற்கையாகவே வெளியேற்றுகின்றன.

இதையும் படியுங்கள்:
உலகம் வியக்கும் நமது ராணுவ வலிமை!
6 Organisms That Do Not Breathe Oxygen

5. நமது வயிற்று பாக்டீரியாக்கள் (Gut Bacteria): ஆக்சிஜன் இல்லாமல் வாழும் உயிரினங்களை தேடி நாம் கடலுக்கு அடியில் செல்ல வேண்டாம். நமது சொந்த வயிற்றுக்குள்ளேயே ஆக்சிஜன் செல்லாத குடல் பகுதிகளில் கோடிக்கணக்கான அனரோபிக் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இவைதான் நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைத்து நமது உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து கொடுக்கின்றன.

6. ஆழ்கடல் நூற்புழுக்கள் (Deep sea Nematodes): கடலின் அடிமட்டத்தில் உள்ள சேற்றில் எந்த ஒரு காற்றோட்டமும் இருக்காது. அந்த இருண்ட ஆக்சிஜன் இல்லாத உலகத்திலும் சில வகையான விசித்திரமான நூற்புழுக்கள் வாழ்கின்றன. அவை ஆக்சிஜனுக்கு பதிலாக தங்களை சுற்றி இருக்கும் வேறு சில ரசாயனங்களை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான முழு ஆற்றலையும் பெற்றுக்கொள்கின்றன.

இதையும் படியுங்கள்:
இயற்கையின் கண்ணாமூச்சி ஆட்டத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
6 Organisms That Do Not Breathe Oxygen

இயற்கையின் இந்த பிரம்மாண்டமான தகவமைப்புத் திறனை நினைத்தால் நிஜமாகவே சிலிர்ப்பாக இருக்கிறது. மனிதர்களின் அறிவுக்கு எட்டாத இன்னும் பல ஆயிரம் ரகசியங்கள் இந்த உலகத்தில் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com