டைனோசர்களுக்கு முன்னர் இந்த உலகம் எப்படி இருந்தது தெரியுமா? 

Paleozoic Era
Earth Was Like Before Dinosaurs

Paleozoic Era என அழைக்கப்படும் டைனோசர்களுக்கு முந்தைய காலம் பூமியின் வரலாற்றில் மிகவும் முக்கியமான காலமாகும். வலிமைமிக்க டைனோசர்களின் காலத்திற்கு முன் நமது கிரகம் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வதே உண்மையிலேயே சுவாரசியமான ஒன்றாகும். அதைத் தெரிந்துகொள்ள இந்தப் பதிவின் வாயிலாக சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நாம் காலப்பயணம் செய்யப்போகிறோம். 

டைனோசர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் பூமியின் நிலப்பரப்பு ஒன்றாக இணைந்த சூப்பர் கண்டங்களாக இருந்தது. இதில் மிகவும் பிரபலமானது 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த Pangaea என்கிற நிலப்பரப்பு. இப்போது இருப்பது போல கண்டங்கள் தனித்தனியாக பிரியவில்லை. பெரும்பாலான நிலப்பரப்பு ஆழமற்ற கடல்கள் மற்றும் சதுப்பு நிலங்களால் மூடப்பட்டிருந்தது. 

அச்சமயத்தில் கடலில் வினோதமான கடல் வாழ் உயிரினங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. Trilobites, Ammonites மற்றும் ‌Brachiopoda போன்ற பண்டையகால உயிரினங்கள் கடல்களை ஆண்டு வந்தன. இந்த கடல் உயிரினங்கள் கடல் சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன. மேலும் இன்று இருக்கும் பல உயிரினங்களின் மூதாதையர்களாக இந்த உயிரினங்கள் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. 

Ferns, Horsetails மற்றும் Conifers போன்ற பழமையான தாவரங்களால் காடுகள் நிறைந்திருந்தன. இந்த தாவரங்களில் பூக்கள் மற்றும் பழங்கள் இல்லை என்றாலும் விலங்குகளுக்கு வாழ்விடங்களை வழங்கின. இத்தகைய தாவரங்களே பூமியில் நிலக்கரி உருவாக்கத்திற்கு வழிவகுத்தன. 

மேலும், இந்த காலகட்டத்தை பூச்சிகளின் காலம் என்றும் கூறுவார்கள். இரண்டு அடிக்கு மேல் இறக்கைகள் கொண்ட பிரம்மாண்டமான தட்டான் பூச்சி, பெரிய தேள்கள், மரவட்டை போன்ற உயிரினங்கள் காட்டின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தன. இந்த பழங்கால பூச்சி இனங்கள் நாம் இன்று காணும் சிறிய வகை பூச்சிகளின் மூதாதையர்களாகும். அச்சமயத்தில் இருந்த அதிக அளவிலான ஆக்சிஜன் காரணமாக, பூச்சி இனங்கள் பிரம்மாண்டமாக உருமாற்றம் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. 

Paleozoic காலத்தில் டைனோசர் இனம் தோன்றவில்லை என்றாலும், டைனோசர்களின் ஆரம்பக்கட்ட ஊர்வன உயிரினங்கள் இருந்தன. Dimetrodon மற்றும் Eryops போன்ற ஊர்வன உயிரினங்கள் சதுப்பு நிலங்களில் பெருமளவில் வாழ்ந்தன. அவை அடுத்த சகாப்தத்தில் பூமியில் ஆதிக்கம் செலுத்தும் டைனோசர்களின் உருவாக்கத்திற்கு முன்னோடிகளாக இருந்தன. 

பின்னர், குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் மாற்றங்களால் இந்த காலகட்டம் பேரழிவை சந்தித்தது. Permian-Triassic எனப்படும் பேரழிவால் பூமியில் இருந்த கிட்டத்தட்ட 90 சதவீத உயிரினங்கள் அழிந்துபோனது. இந்த அழிவுதான் டைனோசர்களின் எழுச்சிக்கும், அவை வாழ்ந்த காலகட்டமான Mesozoic காலத்திற்கும் வழி வகுத்தது. 

இதையும் படியுங்கள்:
Carboniferous Period: ராட்சத பூச்சிகளின் காலத்தில் இந்த உலகம் எப்படி இருந்தது தெரியுமா? 
Paleozoic Era

பூமியின் வரலாற்றை நாம் புரிந்துகொள்வது, மில்லியன் கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்ட மகத்தான மாற்றங்களை நாம் தெரிந்துகொள்ள உதவுகிறது. மற்றும் இன்று நாம் வாழும் உலகம் ஒரே நாளில் உருவானது அல்ல, பலபில்லியன் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சி இதில் உள்ளது என்கிற பார்வையை நமக்கு வழங்குகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com