நாட்டு மாட்டு இனத்தை பாதுகாத்ததால் பர்கூர் ஆராய்ச்சி மையத்திற்கு பாராட்டு!

Native cow Breeds.
Native cow Breeds.

நாட்டு மாட்டு இனத்தை பாதுகாத்ததற்காக 2023 இன பாதுகாப்பு விருது பர்கூர் ஆராய்ச்சி மையம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு நாட்டு மாடுகளை காக்கும் விதமாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலமாக ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் பகுதியில் பர்கூர் நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க தனி நிலையம் அமைத்து செயல்படுத்தி வருகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் பர்கூர் நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் பர்கூர் நாட்டு மாடு இனங்களை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 2012 ஆம் ஆண்டு கணக்கின்படி பர்கூர் நாட்டு இனங்கள் 14,154 இருந்த நிலையில், இந்த மையத்தின் வருகைக்கு பிறகு 2019 ஆம் ஆண்டு கணக்கின் படி 42,300 பர்கூர் நாட்டு இனங்கள் கணக்கிடப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த மையத்தில் 170 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை இனப்பெருக்கத்திற்காகவும், பால் மற்றும் பால் பொருள்களுக்காகவும், மற்றும் இன பாதுகாப்பிற்காகவும் வளர்க்கப்படுகின்றன.

இவ்வாறு 3 இடங்களில் என்று மொத்தமாக 59 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைக்கப்பட்டு பர்கூர் நாட்டு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு பராமரிக்கப்பட்டு பிறகு விவசாயிகளிடமும், நாட்டு மாடு கேட்பவர்களிடமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு சிறந்த முறையில் பர்கூர் நாட்டுமாடு இனங்களை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
முதல் பாடலிலேயே தேசிய விருது பெற்ற அப்பா, மகள் யார் தெரியுமா?
Native cow Breeds.

இதை அங்கீகரிக்கும் வகையில் தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டு விலங்கின மரபு வாரியம் இணைந்து இன பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், நாட்டு மாடு இனங்களை பாதுகாத்து இன ப்பெருக்கத்தை தூண்டியதற்காகவும் "இன பாதுகாப்பு விருது 2023" யை பர்கூர் நாட்டு மாட்டு இன ஆராய்ச்சி நிலையத்திற்கு வழங்கியிருக்கிறது.

இந்த விருதை பெற நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் போட்டியிட்ட நிலையில் பர்கூர் நிலையம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com