விவசாயிகளுக்கு ஓய்வூதியம்: ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநாட்டில் தீர்மானம்!

விவசாயிகளுக்கு ஓய்வூதியம்: ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநாட்டில் தீர்மானம்!

‘அறுபது வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும் அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என்று திருச்சியில் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கோரிக்கை விளக்க மாநாடு திருச்சி எல்.கே.எஸ். திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் வரவேற்புரை ஆற்றினார். இதில் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர்கள் ஹன்னன்முல்லா, வெங்கையா ஆகியோர் உரை நிகழ்த்தினார்.

மாநாட்டில் 13 மாதங்கள் முப்பருவ காலங்களில் போராடிய விவசாயிகள் 780 பேர் உயிரிழந்த நிலையில், மத்திய அரசின் சார்பில் பிரதமர் மோடி அரசு, ‘கோரிக்கைகளைத் தீர்ப்போம்’ என்று எழுதித் தந்தபடி, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. உறுதி அளித்து, எழுதிக்கொடுத்து 28 மாதங்கள் கடந்தும், ஒப்புதல் அளித்த கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாதது மட்டுமல்ல, மின்சார சட்டத் திருத்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

கைவிடப்பட்டதாக சொன்ன வேளாண் சட்டத்தை மறுபடியும் கொண்டு வருவதற்கான முயற்சியும் தற்போது நடைபெற்று வருகிறது. இதைக் கண்டிக்கும் விதமாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நவம்பர் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அனைத்து விளைப்பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த சட்டம், 60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com