பிளாஸ்டிக்கை இப்படியும் மறுசுழற்சி செய்யலாம்!

Plastic recycling
Plastic recycling
Published on

என்னதான் அரசாங்கம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைத்து வந்தாலும், அதை மக்கள் அதிகம் பயன்படுத்துவதற்கான தேவை குறைந்த பாடில்லை. அந்த வகையில் பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பில்லாத வகையில் மறுசுழற்சி செய்யும் புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு மூலமாக பெரிய மற்றும் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பெட்டிகள், பிவிசி பைப் போன்றவற்றை முற்றிலும் வேதியியல் முறையைப் பயன்படுத்தி மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும். இந்த புதிய வழிமுறையால் சுற்றுச்சூழலில் கரியமிலவாயு கலப்பதை வெகுவாகக் குறைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இத்தகைய புதுவிதமான மறு சுழற்சி முறையில், பிளாஸ்டிக் பொருட்களின் மிகக் கடினமான மூலக்கூறுகளை உடைக்கக்கூடிய வினையூக்கியைப் பயன்படுத்தி, அதன் வேதிவினை மாற்றத்தை வேகப்படுத்த ஒளியையும் பயன்படுத்துகின்றனர். அத்துடன் இந்த நடைமுறையின்போது உருவாகும் அமிலங்களைப் பயன்படுத்தி, நைட்ரஜன் உள்ளிட்ட பல பசுமை எரிபொருட்களையும் தயாரிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன்பு இருந்த பிளாஸ்டிக் மறுசுழற்சியானது முற்றிலும் இயந்திரபூர்வமாக நடப்பதாகும். இதனால் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டு காலம் குறைக்கப்பட்டு, மறுசுழசியின்போது கழிவுப் பொருட்களை நீக்கி, பிரித்தெடுத்து, அவற்றை சுத்தப்படுத்தி, பல வேதிப்பொருட்களை கலந்து, அரைத்து, பிளாஸ்டிக்கிற்கு முற்றிலும் மறு வடிவம் கொடுக்கிறது. 

ஆனால் சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய தொழில்நுட்பம் முற்றிலும் மாறுபட்டு ஒன்றாக உள்ளது. இது எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com