பூச்சிகளை ஏமாற்றி வேலை வாங்கும் செடிகள்… தாவரங்களின் மாஸ்டர் பிளான்!

pollinator-syndrome
pollinator-syndrome
Updated on

வீடுகளில் ஆசையாகச் செடிகளை வளர்ப்பவர்கள் அந்தப் பூக்களின் நிறத்தையும் வாசனையையும் பார்த்து தங்களை மகிழ்விப்பதற்காகவே அவை பூப்பதாகப் பெருமைப்படுவார்கள். ஆனால், நிஜத்தில் தாவரங்கள் போடும் பிளான் வேறு ரகம். செடிகள் தங்களது சந்ததியைத் தொடர்ந்து பெருக்கிக் கொள்ள மகரந்தச் சேர்க்கை என்னும் நிகழ்வு கட்டாயம் நடந்தாக வேண்டும். 

இதற்காக அந்தச் செடிகள், பறக்கும் பூச்சிகளை ஏமாற்றித் தங்களை நோக்கி ஈர்க்க பலவிதமான தந்திரங்கள் செய்கின்றன. இந்த வியக்க வைக்கும் இயற்கையின் வித்தையைத் தான் அறிவியலாளர்கள் 'பாலினேட்டர் சின்ட்ரோம் (Pollinator Syndrome)' என அழைக்கிறார்கள்.

தேனீக்களின் வீக்னெஸ்!

தேனீக்களையும் மற்ற பூச்சிகளையும் கவர செடிகள் செய்யும் தந்திரங்கள் நிஜமாகவே அற்புதம். மஞ்சள், நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் மனதை மயக்கும் அதீத வாசனையுடன் பூக்கும் மலர்களைத் தேனீக்கள் அதிக அளவில் தேடிச் செல்லும். இதில் 'பீ ஆர்க்கிட்' என்ற செடி செய்யும் திருவிளையாடல் கொஞ்சம் ஓவர்தான். 

இந்த மலர் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரு பெண் தேனீயைப் போலவே செம க்யூட்டாக உருமாறி காட்சியளிக்கும். இதை நிஜம் என நம்பி ஏமாந்து வரும் ஆண் தேனீக்கள், ஆசையாகப் பூவின் மீது வந்து அமரும். அந்த கேப்பில் செடிகள் தங்களது மகரந்தத்தை அந்தத் தேனீக்களின் மீது மிகவும் சாதுரியமாக ஒட்டி அனுப்பிவிடும்.

வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கும் டெக்னிக்!

வண்ணத்துப்பூச்சிகளின் ரசனையை எடுத்துக்கொண்டால் அது முற்றிலும் வேறு லெவலில் இருக்கும். அவற்றுக்கு அடர்த்தியான சிவப்பு மற்றும் ஊதா நிறங்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். மேலும், அவை சௌகரியமாக அமர்ந்து பொறுமையாகத் தேனைக் குடிக்க வசதியாக ஒரு தட்டையான தளத்தைக் கொண்ட மலர்களையே அதிகம் சுற்றி வரும்.

 'மோனார்க்' எனப்படும் வண்ணத்துப்பூச்சிகளை ஈர்ப்பதற்காகவே, 'மில்க்வீட்' செடிகள் ஒரு பிரத்யேகமான குழாய் போன்ற அமைப்பைத் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மக்காச்சோள மகசூலை குறைக்கும் படைப்புழு தாக்கத்தை தவிர்க்கும் வழிகள்!
pollinator-syndrome

அந்துப்பூச்சி Vs பிண மலரின் ரகசியம்!

இருட்டில் சுற்றும் அந்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிரகாசமான நிறங்களைக் கண்டால் சுத்தமாக ஆகாது. அதற்கேற்ப, இரவு நேரங்களில் பூக்கும் செடிகள் வெளிர் நிறங்களிலும், பகல் நேரச் செடிகள் அடர்த்தியான நிறங்களிலும் பூத்து அந்தப் பூச்சிகளைக் கவர்கின்றன.

இதையெல்லாம் விட ஒரு மிகப் பெரிய சுவாரஸ்யம் சுமாத்திரா காடுகளில் வளரும் 'பிண மலர்' செய்யும் அட்டகாசமான தந்திரம் தான். இது உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமான மலர்களில் ஒன்றாகும். இது பூக்கும்போது அதிலிருந்து அழுகிய மாமிசம் போன்ற மிகக் கடுமையான துர்நாற்றம் சுற்றிலும் வீசும். 

இந்த அருவருப்பான வாசனையைத் தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய உணவு என்று ஏமாந்து வரும் வண்டுகளும் ஈக்களும், தங்களை அறியாமலேயே இந்த செடியின் இனப்பெருக்கத்திற்கு இலவசமாக உதவி செய்துவிட்டுச் செல்கின்றன. இந்த அரிய வகை செடிகள் தற்போது பல சர்வதேச தாவரவியல் பூங்காக்களில் மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
பல் பிரச்னை முதல் சளி பிரச்னை வரை... நலம் பயக்கும் நாயுருவி!
pollinator-syndrome

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு தாவரமும் தனக்கான ஒரு சரியான துணையைத் தேடிக்கொள்ள இப்படிப் பல நுட்பமான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. சில பூச்சிகள் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் எல்லாப் பூக்களிலும் அமர்ந்து தேன் குடிப்பது இயற்கையின் மற்றொரு அழகான பக்கமாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com