பயன் தரும் சிவப்பு முள்ளங்கி.. விவசாயிகளுக்கு லாபம்!

Red radish.
Red radish.

தேவை அதிகரித்து இருப்பதால் சிவப்பு நிற முள்ளங்கிகள் விவசாயிகளுக்கு லாபம் தரும் விளைபொருளாக உள்ளது.

முள்ளங்கி ஒவ்வொரு வீட்டு அடுப்பங்கரைகளிலும் பிரதான உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அது வெள்ளை நிற முழங்கிகளாகவே பெரும்பான்மையாக இருக்கின்றன. கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும் சிவப்பு நிற முள்ளங்கி அதிகப்படியான நன்மைகளை தரக்கூடியது.

சிவப்பு நிற முள்ளங்கியில் ஆண்டி ஆக்சிடென்ட் அதிகம் இருக்கிறது. இதனால் அதிக அளவில் ஊட்டச்சத்து இதன் மூலம் மனிதர்களுக்கு கிடைத்தும். மேலும் இதய நோய்க்கு ஏற்றது. நோய் பரவலை தடுக்கும் ஆற்றல் மிக்கதாகவும் உள்ளது. அதோடு ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும் ஆகச்சிறந்த மருந்தாகவும் இது வழங்குகிறது. இதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உடலுக்கு தேவையான அதிகப்படியான சக்தி வழங்க கூடியதாகவும் இருக்கிறது.

பல்வேறு நன்மைகளை நிரம்பப் பெற்று இருப்பதால் சிகப்பு நிற முள்ளங்கிகள் வரத்து குறைவாக இருந்தாலும் சந்தைக்கு வந்த உடனே விற்பனையாகும் தன்மையாகக் கொண்டதாக இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் உறுதி செய்யப்படுகிறது.

சிகப்பு சிகப்பு நிற முள்ளங்கிகளை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் குளிர்காலங்களில் தரமான விதைகளை தேர்வு செய்து பயிரிட்டால் அதிகப்படியான லாபத்தை பெற முடியும். மேலும் வெள்ளை முள்ளங்கி பயிரிட வளிமண்டலத்தில் இருக்கும் ஈரப்பதம் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவும். வடிகால்களைக் கொண்ட களிமண் நிலத்தில் பயிரிடுவது ஏற்றது. விதை இடுவதற்கு முன்பு இரண்டு, மூன்று முறை நன்கு உழ வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பொருள் ஒன்று விதவிதமான சத்தான முள்ளங்கி ரெசிபிகள் மூன்று!
Red radish.

அப்போது மாட்டு சாணத்தை நிலத்தில் சேர்த்தால் அதிக பயன் கிடைக்கும். அதன் பிறகு விதையை நிலத்தில் இட்டு பயிரிட வேண்டும். மண்ணில் பி ஹெச் அளவு 6.5 முதல் 7.5 ஆக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆர்கானிக் உரங்களை தேர்வு செய்து விளைச்சலுக்கு பயன்படுத்துவது ஏற்றது. பயிரிட்டு 50 முதல் 60 நாட்களில் சிகப்பு முள்ளங்கி பயன் தரக்கூடியது. சிறப்பு முள்ளங்கி தேவை அதிகரித்து இருப்பதால் விவசாயிகளுக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com