ஆஸ்திரேலியாவில் அதிகப்படியாக காணப்படும் இந்த விலங்கு ஒரு பாலூட்டி இனத்தைச் சார்ந்ததாகும். இந்த விலங்கின் முக வடிவமே சிரித்த முகத்துடன் இருப்பதால்தான், இதனை உலகின் மகிழ்ச்சியான விலங்கு என்று கூறுகிறார்கள்.
இது சராசரியாக ஒரு பூனையின் அளவைக் கொண்டிருந்தாலும் எலியை போல் இருக்கும். மேலும் இவை கங்காருக்கள், கோலா கரடிகள் மற்றும் பிளாட்டிபஸ்களை உள்ளடக்கிய ஆஸ்திரேலியாவில் உள்ள வாலாபி வகை விலங்குகளைச் சேர்ந்தவை.
இந்த விலங்குகள் அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் ரெட் ஜோனில் உள்ளன. இன்றுக் காடுகளில் சுமார் 12000-14000 விலங்குகள் மட்டுமே உள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை ராட்னெஸ்ட் தீவில் உள்ளன. இவை இந்த தீவில் மட்டுமே குழுக்களாக வாழ்கிறன. மற்றும் பிரதான நிலப்பரப்பில் அவர்களின் மக்கள்தொகை மிகவும் குறைவாகவும் சிதறியதாகவும் உள்ளது. இந்த விலங்கு அதன் புன்னகை முகத்தின் காரணமாக 2015 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமடைந்தது. இது சமூக ஊடக தளங்களில் குறிப்பாக Instagram இல் வைரலானது.
Setonix brachyurus என்ற இனப்பெயரைக் கொண்ட இந்த விலங்கின் பெயர் Quokka. ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளின் செய்ய வேண்டிய பட்டியலில் இந்த Quokka செல்ஃபி உள்ளது. மரபணு ரீதியாக, உடலில் தசைநார் சிதைவை உருவாக்கும் ஒருவகையான நோயை இது கொண்டுள்ளது. இதனால், விலங்குகளின் தசைகள் பலவீனமடையும் அல்லது சேதமடையும்.
குவாக்காக்கள் பொதுவாக 2.5 கிலோ முதல் 5 கிலோ வரை எடை இருக்கும். அவை 40-54 செமீ நீளமும், கூடுதலாக 25-30 செமீ அளவு வாலுடனும் இருக்கும்.
1658ம் ஆண்டு குவோக்காவை முதன்முதலில் பார்த்தது டச்சு மாலுமி சாமுவேல் வோல்கெர்ட்ஸூன், அவர் குவாக்காவை ஒரு வகையான காட்டுப் பூனை என்று எண்ணினார்.
பின்னர் 1696ல் மற்றொரு டச்சுக்காரர், வில்லெம் டி விளாமிங், குவோக்காவை பெரிய எலிகள் என்று தவறாகக் கருதினார். குவாக்காவை எலிகள் என்று அவர் நினைத்ததால்தான், பின்னர் அந்தத் தீவுக்கு ராட்டனெஸ்ட் என்று பெயர் வந்தது. அதாவது டச்சு மொழியில் எலி கூடு என்று பொருள். குவோக்கா என்ற பெயர் குவாகா என்ற சொல்லில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய தாய்மொழியான நியுங்கரில் குவாகாவை விவரிக்க குவாகா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
எந்த மூடில் இருப்பவர்களும் இந்த விலங்கின் முகத்தைப் பார்த்தால், புன்னகைத்து விடுவார்கள். ஏனெனில் இது மகிழ்ச்சியான விலங்கு மட்டுமல்ல, மகிழ்ச்சியடைய வைக்கும் விலங்கும் கூட.