தொடர் மழை எதிரொலி: ரப்பர் பால் தொழில் பாதிப்பு!

தொடர் மழை எதிரொலி: ரப்பர் பால் தொழில் பாதிப்பு!
Published on

ன்னியாகுமரி மற்றும் கேரளம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் பிரதானத் தொழிலாக ரப்பர் மரங்களில் இருந்து பால் எடுக்கும் விவசாயம் நடைபெறுகிறது. இதையே பிரதான தொழிலாக நம்பி கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். மேலும், கேரளம் மாநிலத்தின் பல்வேறு ரப்பர் தோட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் குடியேறி, ரப்பர் பால் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளத்தின் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ரப்பர் பால் சேகரிக்கும் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இது குறித்து ரப்பர் பால் எடுக்கும் விவசாயி ஒருவர் கூறியபோது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இவற்றை அரசு ரப்பர் கழகமும், தனியார் ரப்பர் தோட்டங்களும், சிறு குறு ரப்பர் விவசாயிகளும் நடத்தி வருகின்றனர். இப்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரப்பர் பால் எடுக்கும் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன.

தற்போது பூச்சிகளின் தாக்கம், விலங்குகளின் நடமாட்டம், பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணிகளால் ரப்பர் மரங்கள் குறைந்த அளவிலேயே பாலை உற்பத்தி செய்கின்றன. இதனால் ரப்பர் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பலரும் மாற்றுத் தொழில் நோக்கி செல்லத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் இந்தத் தொழிலில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதுமட்டுமின்றி, ரப்பர் பாலுக்கும் சரியான விலை கிடைக்கவில்லை.

இப்படி பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய ரப்பர் விவசாயிகள் கடந்த சில நாட்களாக தொடர் மழையின் காரணமாக மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து இருக்கின்றனர். குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ரப்பர் பால் எடுக்கும் தொழில் முற்றிலும் முடங்கி இருக்கிறது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com