பல்லி வால் துண்டிக்கப்பட்ட பிறகு எப்படி மீண்டும் வளரும்? - 99% பேருக்கு தெரியாத மர்மம்!

Lizard
Lizard
Published on

நம் வீடுகளின் சுவர்களில் சாதாரணமாக உலவும் பல்லிகளின் வால் ஏதோ ஒரு காரணத்தால் துண்டிக்கப்படுவதப் பார்த்திருப்பீர்கள். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அதே பல்லி புதிய வாலுடன் மீண்டும் சுற்றித் திரிவதைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதுண்டு. இயற்கையானது ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உயிர் வாழவும் பல சிறப்பம்சங்களையும் சக்திகளையும் வழங்கியுள்ளது. அத்தகைய சிறப்பு சக்திகளில் ஒன்றுதான் பல்லியின் இந்த வினோதமான வால் வளரும் திறன். இந்த அறிவியல் நிகழ்வு, 'மீளுருவாக்கம்' (Regeneration) என்று அழைக்கப்படுகிறது.

வால் வளரும் அறிவியல் காரணம்:

ஒரு பல்லியின் வால் துண்டிக்கப்படும்போது, அதன் உடலில் உள்ள செல்கள் அந்த இடைவெளியை நிரப்ப ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கத் தொடங்குகின்றன. இந்த செயல்பாடு, பல்லிக்கு நோய்த்தொற்றுகள் அல்லது வேறு எந்த வகையான நோய்களும் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. இந்தச் செயல்பாட்டின் போது, செல்களில் ஒரு கரு போன்ற நிலை உருவாகிறது. இதன் காரணமாக, வாலில் பல்வேறு திசுக்களின் உருவாக்கம் தொடங்குகிறது. இந்த புதிய செல்கள் மற்றும் திசுக்கள் உருவான பிறகு, பல்லியின் வால் படிப்படியாக மீண்டும் வளர்கிறது. பல வகையான பல்லிகள் இருந்தாலும், இந்த வால் மீளுருவாக்கம் செய்யும் திறன், நம் வீடுகளில் காணப்படும் சாதாரணப் பல்லிகளிலேயே மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது.

ஆபத்தில் இருந்து தப்பிக்கும் தந்திரம்:

ஒரு பல்லியின் வால் உதிர்ந்து புதிய ஒன்று வளர்வது அதன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. ஒரு பல்லி ஏதேனும் ஆபத்தை எதிர்கொள்ளும்போது, அதாவது ஒரு வேட்டையாடி நெருங்கும்போது, அது தனது வாலைத் தானாகவே துண்டித்துவிடுகிறது. துண்டிக்கப்பட்ட வால், சில நிமிடங்கள் தனியாக அசைந்துகொண்டிருக்கும். இந்த அசைவு, அதன் எதிரிகளின் கவனத்தைத் திசை திருப்புகிறது. இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, பல்லி அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பித்துவிடுகிறது. இது இயற்கையால் பல்லிக்கு வழங்கப்பட்ட ஒரு சிறந்த பாதுகாப்பு அமைப்பாகும். இதன் மூலம், தன் உயிரைப் பணயம் வைக்காமல் ஆபத்தில் இருந்து தப்பிக்கும் திறனைப் பல்லி பெறுகிறது.

இதையும் படியுங்கள்:
பெயிண்ட் அடித்தது போல பளிச்சென்று இருக்கும் 10 பல்லி இனங்கள்!
Lizard

பல்லியின் இந்த மீளுருவாக்கத் திறன், அதன் தனித்துவமான உயிர்வாழும் வழிமுறைகளில் ஒன்றாகும். இது இயற்கையின் அற்புதம் என்பதோடு, அறிவியல் ரீதியாகவும் ஆராயப்பட வேண்டிய ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com