3 ஆண்டுகள் வரை தூங்கும் உயிரினம்! என்ன காரணம்?

Sea Snail
Sea Snail
Published on

ஒரு சில உயிரினங்களுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே தூக்கம் இருக்கும். மனிதர்களுக்கு 8 மணி நேரம் என்பது அத்தியாவசியமாகும். ஆனால் ஒரு உயிரினம் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை தூங்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நினைத்தாலே தலை சுற்றவைக்கும் இப்படி ஒரு ஆச்சரியம் உலகத்தில் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..

இந்த உலகம் நமக்குத் தெரியாத பல மர்மமான விஷயங்களால் நிறைந்துள்ளது. அவற்றைப் பற்றி அறியும்போது நாம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. இந்த உயிரினமும் அவற்றில் ஒன்று.

தூக்கம் என்பது உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுப்பது. மறுநாள் எழுந்து அடுத்த வேலையை செய்வதற்கு அந்த தூக்கம் தேவைப்படுகிறது. இப்படி அனைத்து உயிரினமும் வேட்டையாடுவதையே வேலையாக வைத்தாலும், சாப்பிட்டு விட்டு நிம்மதியாக தூங்கும்.

அப்படி தான் கடல் நத்தை (sea snail) என்று அழைக்கப்படும் உயிரினமானது அமைதியான மற்றும் மெதுவான இயக்கங்களுக்கு பெயர் பெற்றவை. இவை சுமார் 3 ஆண்டுகள் தொடர்ந்து தூங்க கூடியவை. இதன் பின்னால் இருக்கும் காரணத்தையும், பலருக்கும் தெரியாத உண்மையை பற்றியும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
விண்வெளியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால்...? என்ன ஆகும் தெரியுமா?
Sea Snail

அதாவது, சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவு பற்றாக்குறை, அதிக வெப்பம் காரணமாக தங்களை காத்துக் கொள்ள நீண்ட கால உறக்க நிலைக்கு செல்கின்றன. இந்த மாதிரியான காலத்தில் அவற்றின் உடல் செயல்பாடு நின்றுவிடும், முற்றிலும் தூக்க நிலைக்கு சென்று விடும். இந்த உறக்கநிலை காலமானது வாரங்கள் அல்லது மாதங்கள் வரை நீடிக்கும். சில நேரங்களில் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும். இதற்கு காரணம் என்னவென்றால், நீண்ட தூக்கம் அவற்றின் மூளை, ஆற்றல் மற்றும் செரிமான அமைப்பை பாதுகாக்கிறது. மேலும், இந்த உறக்க நிலை இவற்றின் ஒரு தனித்துவமான பாதுகாப்பு என்றும் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com