கடற்பாசியினால் நமக்கு என்ன நன்மை? அதற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்?

seaweed benefits
seaweed benefits
Published on

ல நாடுகள் கடற்பாசியை உணவாக உட்கொண்டும், முறையாக வளர்த்தும் பயன்படுத்தி வருகின்றன.  அப்படி பயன்படுத்துவதன் அவசியம் என்ன? அந்த கடற் பாசிகளால் என்னென்ன நன்மைகள், என்னென்ன சத்துக்கள் கிடைக்கின்றன என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம். 

சுவை:

நமது உடல் நலத்தை சீர்படுத்துவதிலும் நமது சத்துணவு தேவையை நிறைவு செய்வதிலும் கடற்பாசிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. கடற்பாசிகள் பல வகையான சத்துப்பொருட்களை கொண்டிருப்பதோடு விரும்பி உண்பதற்கு ஏற்ற சுவையையும் கொண்டவை. 

ஆபத்துக்கு உணவு:

கப்பலில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்துகளில் தப்பிய சிலர் நடுக்கடலில் உணவுக்குத் திண்டாடிய வேளையில் அவர்களுக்கு உணவாக பயன்பட்டு, அவர்களை  கண்டுபிடித்து காப்போர் காணும் வரை குணமாகி காத்து நின்றது இந்தக் கடற்பாசிகளே என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று ஜப்பானியர்களும், அமெரிக்கர்களும் அறிவியல் முறையில் கடற்பாசிகளை நல் உணவுகளில் ஒன்று என ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் வேறு உணவில்லை என்பதல்ல. அதில் நிறைந்து கிடக்கும் சத்துக்களே காரணம்.

முக்கியம்:

கடற்பாசியில் அதிகமான அயோடினும், ஓரளவு புரதமும், பலவகை தாதுப் பொருட்களும், திரளான உயிர்ச் சத்துக்களும் உள்ளன. கடல் நீரில் இருந்து நாம் நேரடி உணவாக எடுத்து பயன்படுத்த முடியாத அளவில் கரைந்துள்ள உலோகப் பொருட்களை  இந்த கடற்பாசிகள் தேக்கி வைத்திருந்து நமக்கு வழங்குகின்றது. இவ்வாறு சேர்த்து வைக்கப்பட்ட உலோக மற்றும் தாது சத்துக்கள் பலவற்றையும் கடற்பாசிகளை உண்ணும் போது நாம் பெற்றுக் கொள்கிறோம். இதுவும் கடற்பாசிகளின் முக்கியத்துவத்திற்கு காரணமாகும். 

பாலி சாக்கரைடுகள்: (Polysaccharides)  பலவும் காணப்படுகின்றன. அல்ஜினிக் (Alginic Acide) அமிலம்,  லேமிநேரன்( Laminaaran) , ஃப்யூக்காய்டன் (Fucoidan), கராசிகினன் (Carrageenan) போன்ற பாலிசாக்கரைடுகள் வேறெந்த தாவரங்களிலும் இல்லாமலும் கடற் பாசிகளில் மட்டுமே காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்:
பயிர் கழிவில் இருந்து பிளாஸ்டிக்... அசத்தும் ஜெர்மன் தொழில்நுட்பம்!
seaweed benefits

அயோடின்:

கடற்பாசிகளில் போதிய புரதம் நிறைந்துள்ளது. குறிப்பாக மெதியோனினும், கிரிப்டோபேனும் ஏனைய தாவர உணவுப் பொருட்களை காட்டிலும் கடற்பாசிகளில் அதிகமாக காணப்படுகின்றன. மனிதனுக்கு தேவையான உணவில் இருக்கவேண்டிய அனைத்து தாவர பொருட்களும் காணப்படுவதுடன், குறிப்பிட்ட சில உலர்ந்த கடற்பாசிகளில் அயோடின் அளவு ஒரு விழுக்காடு அளவுக்கு உள்ளது. அதிகமான அளவில் கிடைக்கும் உயிரியல் அயோடின் இதுவே ஆகும். 

கடற்பாசிகளில் பொட்டாசியம், சோடியம், குளோரின் இவற்றோடு தாமிரம், மாங்கனிசு, துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. 

உயிர்ச்சத்து (Vitamins):

 பொதுவாக பல தாவரங்களில் உயிர்ச்சத்து பி12 இருப்பதில்லை. ஆனால் உலர்ந்த கடற்பாசிகளில் ஒரு கிராம் கடற்பாசிக்கு ஒரு மியூகிராம் என்னும் அளவில் உயிர்ச்சத்து பி12 உள்ளது. இது இச்சத்தினை அதிகம் சேமித்து வைக்கும் ஈரலுக்கு இணையாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிக அளவு 'சி':

உயிர்ச்சத்து பி 12ஐ சேமித்து வைக்கும் ஈரலை போல எலுமிச்சம் பழத்தில் உயிர் சத்து சி அதிகம் உள்ளது. இப்படி எலுமிச்சைப் பழச்சாற்றில் உள்ள உயிர் சத்து சி யின் அளவைவிட சர்க்காசம் (Sragassum) என்னும் கடற்பாசியில் உள்ள உயிர்ச்சத்து சி யின் அளவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்:
செடிகளுக்கும் மொழி உண்டு! அறிவியலை அதிர வைத்த தாவரங்களின் உரையாடல்!
seaweed benefits

உயிராற்றல் வளர:

மனித உணவாக பயன்படும் கடற்பாசியில் மலட்டு தன்மையை எதிர்த்து அதை மாற்றும் டோக்கோ பெரால் (Tocopheral) என்னும் வைட்டமின் ஈ (Antisteritity Vitamin 'E') இருப்பது அறியப்பட்டுள்ளது. கடற்பாசிகளை உண்ட விலங்கினங்களில் ஆண்மை திறனும், விந்துக்களின் பிழைப்புத் திறனும் அதிகரித்ததாகவும் அறிய முடிகின்றது. 

இது போன்ற பல்வேறு நன்மை பயக்கும் காரணங்களால் கடற்பாசியை அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். உணவுக்கு மட்டும் இன்றி மருத்துவத்திற்கும் பெரும் அளவில் பயன்படுவதே கடற்பாசிகளின் உன்னதப்பணி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com