Selaginella Lepidophylla: 100 வருடங்கள் கழித்தும் உயிர்த்தெழும் அதிசயம்!

 Selaginella Lepidophylla
Selaginella Lepidophylla
Published on

பொதுவாக ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பிறகும் ஒரு மூன்று நிமிடங்களிலோ அல்லது ஐந்து நிமிடங்களிலோ திரும்பி வரலாம். அதையே நாம் இயற்கையின் அதிசயம் என்று கூறுகிறோம். ஆனால் இந்தத் தாவரம் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் ஏன் 100 வருடங்கள் ஆனாலும் கூட மீண்டும் உயிர்த்தெழுமாம். இந்த அதிசயமிக்கத் தாவரத்தைப் பற்றி பார்ப்போம்.

இறந்துப் போன செடிகளை நாம் மிகவும் கஷ்டப்பட்டு தண்ணீர் ஊற்றி மீண்டும் உயிர்த்தெழ வைப்போம். ஆனால் இந்தத் தாவரமோ பாலைவனப் பகுதிகள் உட்பட சில இடங்களில் மட்டுமே வாழும் தன்மைக் கொண்டது. Selaginella Lepidophylla என்றழைப்படும் இந்தத் தாவரத்தை ஜெரிகோவின் ரோஜா என்றும் டைனோசர் அலை என்றும் அழைப்பார்கள்.

இந்தச் செடி காய்ந்துப் போனால் சுருண்டு உருண்டையாக மாறி இறந்துப்போனதுபோல காட்சியளிக்கும். அதாவது ‘சாகும் ஆனால் சாகாது.’ இது மழைப் பெய்யும் வரை காத்துக்கொண்டிருக்கும். அதுவும் பாலைவனப் பகுதியில் இருக்கும் இந்தத் தாவரம் பல ஆண்டுகாலம் வரை மழை நீருக்காக மட்டுமே காத்துக்கொண்டிருக்கும்.

தன் உயிரை எப்படியாவது மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும். பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மழை வாசம் வந்தால் கூட, காற்றின் உதவியோடு விரைந்து உருண்டு அந்த இடத்திற்குச் செல்லும். இறந்துப்போன தாவரம் என்பதைக் கூட மறந்துவிட்டு மகிழ்ச்சியாகவும் மிகவும் விரைவாகவும் நீர் இருக்கும் பகுதிக்குச் செல்லும். நீர்த் தேக்கத்திற்கு சென்றவுடன் நீரில் சென்று அமர்ந்துக்கொள்ளும்.

 Selaginella lepidophylla
Selaginella lepidophylla

நீரில் சென்றவுடன் தங்களது சேதமடைந்த செல்லுலார் கட்டமைப்புகளை சரி செய்துக்கொள்ளும். மேலும் புரதங்களையும் தனக்குத் தேவையான சர்க்கரைகளையும் உற்பத்தி செய்துக்கொள்ளும். நீரில் இருந்துக்கொண்டு நீண்டக் காலம் தண்ணீர் இல்லாமல் வாழ்வதற்கான ஆற்றல்களை சேமித்துக்கொள்ளும். அதேபோல் இது நீர் கிடைக்கும்போது அதனை அப்படியே தக்கவைத்துக்கொள்வதற்கான சிறப்பு திசுக்களையும் மேம்படுத்திக்கொள்ளும்.

இதையும் படியுங்கள்:
கோடை வெப்பத்தை சமாளிக்க தண்ணீரை சேமிக்கும் அதிசய மரம்!
 Selaginella Lepidophylla

தேங்கிய நீருக்குச் சென்றவுடன் உருண்டை வடிவம் அப்படியே விரிய ஆரம்பிக்கும். அதேபோல் மழை நீர் மேலே பட்டவுடன் விதைகள் சிதறி வளர ஆரம்பிக்கும். பிறகு அந்த இடமே அந்தத் தாவரங்களால் அழகாகும். அதன்பின் அதில் காய், மலர் ஆகியவையும் வளரும்.

 இதில் மற்றொரு பெரிய பிரச்சனை என்னவென்றால் அவை முழுவதுமாக வளர்வதுக்குள்ளேயே மழை நின்று சூர்யன் வந்து அவை வளர்வதைத் தடுத்துவிடுவான். மீண்டும் பல ஆண்டுக்காலம் காத்திருக்கும் சூழல் இந்த Selaginella Lepidophylla  தாவரத்திற்கு வந்துவிடுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com