
பூமி பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பூமியில் வாழும் பல்வேறு வகையான உயிரினங்கள் அழிந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கிபி 19 நூற்றாண்டுகள் வரை காணாத வளர்ச்சியை கிபி 20 ஆம் நூற்றாண்டு கண்டது. அதேசமயம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மட்டும் இல்லாமல் விரைவான அழிவை உருவாக்கும் அபாயகரமான செயல்பாடுகளும் அதிகரித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 21ம் நூற்றாண்டு மிகத் தீவிர சூழலியல் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இதன் காரணமாக தாவரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக science advances எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்நிறுவனம் பூமியில் தன்மையின் தரவுகளை வைத்து நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. பூமி தற்போது கண்டு வரும் பருவநிலை மாற்றம் பூமியின் தன்மையில் பல்வேறு வகையான மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசுபட்டு வருகிறது. இது பூமியில் வாழும் பல்உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். தற்போது இயற்கையின் அனைத்து கூறுகளும் பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக நிலம் மற்றும் நீர் மற்றும் ஆகாயம் என்று பல்வேறு சூழல்களில் வாழும் உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
கடலின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக இன்னும் 50 ஆண்டுகளில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழியக்கூடும். கரியமில வாயுவின் தாக்கத்தினால் 2050 ஆம் ஆண்டில் பூமியில் உள்ள 6 சதவீத தாவரங்கள் அழியக்கூடும், 10 சதவீத விலங்கினங்கள் அழியக்கூடும். இதே நிலை தொடரும் பட்சத்தில் அடுத்த நூற்றாண்டில் 10 ஓர் உயிரினம் அழிந்திருக்கும் என்ற நிலையை உருவாக்கி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.