இயற்கையின் அதிசயம்: இரவு என்னும் நிழல் படராத உலகின் 6 பகுதிகள்!

Countries where the sun never sets
Countries where the sun never sets

உலகில் பல வினோதமான விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவது தான் இயற்கை. அந்த இயற்கை தான் சில அதிசயங்களையும் நிகழ்த்துகின்றது. 

உலகில் சில இடங்களில் சூரியன் மறைவதே இல்லை. 24 மணி நேரத்தில் 20 மணி நேரமாவது இங்கே பகலாகவே இருக்கும். இந்தியாவில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பகல் பொழுதும் 12 மணி நேரம் இரவு பொழுதும் இருக்கிறது. மற்ற சில நாடுகளில் இரவு பொழுது குறைவாகவும் பகல் பொழுது அதிகமாகும் இருக்கும். ஆனால் சில நாடுகளில் இரவு என்பதே இல்லாமல் முழு நேரமும் பகலாகவே இருக்கும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1. நார்வே:

Norway
NorwayImg Credit: National Geographic Kids

உலகில் சூரியன் மறையவே மறையாத நார்வே நாடு ஆர்டிக் சர்க்கிள் பகுதியில் உள்ளது. இந்நாட்டில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சூரியன் மறைவதே இல்லை. இங்கு ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் சூரிய வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும். இரவு என்பதே இருக்காதாம்.

2. கனடா:

Canada
CanadaImg Credit: Adventures

உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு இது. இந்த நாட்டில் பெரும் பகுதிகள் பனியால் மூடப்பட்டிருக்கும். ஆண்டு முழுவதும் பனிப்பொழிவு இருக்கும். இந்நாட்டின் வட துருவத்தில் இனுவிக் என்ற பகுதியில் கோடை காலத்தில் தொடர்ந்து 50 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்குமாம்.

3. ஸ்வீடன்:

Sweden
SwedenImg Credit: Fodors travel guide

இந்த நாட்டில் மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை சூரியன் நள்ளிரவில் மறைந்து அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் உதயமாகிவிடும்.

4. ஐஸ்லாந்து:

Iceland
IcelandImg Credit: Britannica

எங்கு பார்த்தாலும் அழகிய நீர்வீழ்ச்சிகளும், எரிமலைகளும், பனிப்பாறைகளும், ஏராளமான வெந்நீர் ஊற்றுகளும் கொண்ட அழகிய நாடு இது. கொசுக்கள் இல்லாத நாடு என பெயர் பெற்றது. இங்கு மே 10 முதல் ஜூலை வரை சூரியன் மறைவதே இல்லை. இந்த காலங்களில் தான் அந்த நாட்டில் உள்ள மக்கள் மலையேறுதல், குகை வாசம், வனவிலங்குகளை காணுதல், சைக்கிளிங் போன்ற விஷயங்களை செய்கிறார்கள்.

5. அலஸ்கா:

Alaska
AlaskaImg Credit: The Independent

இங்கும் மே மாத இறுதி முதல் ஜூலை மாத இறுதிவரை சூரியன் மறையாமல் இருக்கும். இங்கு கோடை காலத்தில் அதிகாலை 2 மணிக்கெல்லாம் சூரிய ஒளியில் மின்னும் பனி மலைகளை பார்ப்பது மிகவும் அழகாக இருக்கும்.

6. பின்லாந்து:

Finland
FinlandImg Credit: National Geographic Kids

இந்த நாட்டில் ஒரு ஆண்டிற்கு மொத்தமே 73 நாட்கள் மட்டும் தான் சூரியன் இருக்கும். மற்ற நாட்கள் முழுவதும் பனி தான். எப்போதும் விளையாட்டும் கொண்டாட்டங்களும் நிறைந்த நாடு இது. 

இப்படி பூமியில் சில காலத்திற்கு சூரிய அஸ்தமனமே நிகழாத இடங்கள் கூட உள்ளன என்பது இயற்கையின் ஆச்சர்யம் தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com