கோடைக்கால செடிகள் பராமரிப்பு டிப்ஸ்!

Summer plant care tips!
Care of plants
Published on

கோடைக் காலத்தில் அதிக வெப்பம், சூடான காற்று போன்றவற்றால் தாவரங்களை பாதுகாப்பது மிகவும் கடினம். கோடையில் அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய பனைமரம், மல்லிகைப் பூ, கற்றாழை போன்ற செடிகளை வளர்த்தால் ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கும். ஆனாலும் கோடைக் காலத்தில் தாவரங்களை காய்ந்து போகாமல் பாதுகாக்கும் 6 வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1.தண்ணீர் ஊற்றுதல்

கோடையில் செடிகள் காய்ந்து போவதற்கு முக்கிய காரணம் மண் விரைவில் காய்ந்து விடுவதுதான். மண் காய்ந்தவுடன் தாவரங்களுக்கு தண்ணீர் கொடுப்பதுதான் தண்ணீர் ஊற்றும் முறை. ஆகையால் மண் காய்ந்தவுடன் தாவரங்களுக்கு தண்ணீர் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் இருந்தாலும் அதிகமான தண்ணீர் தாவரங்களுக்கு ஊற்றினால் வேர்கள் அழுகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

2.நிழல் விழுவதை உறுதி செய்யுங்கள்

தீவிர சூரிய ஒளி தாவரங்கள் மீது நேரடியாக விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக இரவு 11 மணி முதல் 3 மணி வரை நேரடியாக விழுந்தால், செடிகள் காய்ந்து விடும். எனவே இந்த நேரத்தில் தாவரங்களை உள்ளே கொண்டு வர வேண்டும் அல்லது ஒரு துணியை உள்ளே போட்டு மூட வேண்டும், இதனால் நிழல் விழும்போது தாவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

3.உரங்களின் பயன்பாடு

அதிகப்படியான உரங்களை கோடை காலத்தில் செடிகளுக்கு இடக்கூடாது. ஏனெனில் அதிகப்படியான உரங்களை அளிப்பது தாவரத்திற்கு அதிக அழுத்தத்தை அளிப்பதோடு, செடி அதிக வெப்பத்தில் வளர போராடுகிறது. உர அழுத்தம் தாவரத்திற்கு கூடுதல் பிரச்னையாக மாறும் என்பதால் கோடையில் அதிக உர பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

4.துணியை அகற்ற வேண்டும்

கோடைக் காலத்தில், மாலையில் காற்று குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செடியில் மூடப்பட்டிருக்கும் துணியை அகற்ற மறக்காதீர்கள். புதிய காற்று தாவரங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
விலைமதிப்பற்ற தண்ணீரை சேமித்து சுகமாக வாழ்வோம்.!
Summer plant care tips!

5. இலைகளுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்

தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றும்போது நாம் பெரும்பாலும் மண்ணில் ஊற்றுகிறோம் . ஆனால் கோடை காலத்தில், இலைகளுக்கும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தினமும் தண்ணீர் ஊற்றும்போது, சில துளிகள் இலைகளின் மீது தெளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்டுகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

6.உலர்ந்த இலைகளை அகற்றவும்

செடிகள் ஆரோக்கியமாகவும், தாவரத்தின் ஆற்றலை உறிஞ்சி நன்றாக வளரவும், மஞ்சள் நிற இலைகள் மற்றும் உலர்ந்த இலைகளை அகற்றுவது நல்லது.

மேற்கூறிய வழிமுறைகளை தொடர்ந்து நாம் கையாள கோடைக் காலத்திலும் தாவரங்கள் பசுமையாக இருப்பதை காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com